கோவை குனியமுத்தூர் குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் சிறுத்தை.? அச்சத்தில் மக்கள் : வனத்துறை எடுத்த ஆக்ஷன்!

Author: Udayachandran RadhaKrishnan
24 January 2024, 10:48 am

கோவை குனியமுத்தூர் குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் சிறுத்தை.? அச்சத்தில் மக்கள் : வனத்துறை எடுத்த ஆக்ஷன்!

கோவை, மதுக்கரை வனச் சரகம் நவக்கரை பிரிவு எட்டிமடை காவல் சுற்றுக்கு உட்பட்ட கோவை குனியமுத்தூர் கிராம பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்படுகிறது.

இரவு நேரங்களில் அப்பகுதியில் உலா வருவதாக கிடைத்த தகவலின் படி மாவட்ட வன அலுவலர் அறிவுரைப் படி இரண்டு நாட்களாக வனவர் தலைமையில் வனப் பணியாளர்கள் உடன் சுண்டக்காமுத்தூர் ரோடு, குனியமுத்தூர் ஜே ஜே நகர், அபிராமி நகர், M.S.அவன்யூ, M.S.பார்க், K.M.R.நகர், M.S.கார்டன் மற்றும் செங்குளம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என்பதை தொடர் தணிக்கை மேற்கொண்டனர்.

எந்த ஒரு கால் தடம் மற்றும் தடயங்கள் ஏதும் தென்படாததால் தனிக்குழு அமைத்து சிறுத்தை நடமாட்டத்திற்கான தடயங்களை கண்காணிக்க தானியங்கி புகைப்பட கருவி (camera trap) பொருத்தி தொடர் கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் மேற்கொண்டு வருகிறனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 387

    0

    0