தனியாக இருந்த சிறுமி பாலியல் வன்கொடுமை.. பனியன் தொழிலாளர்களுக்கு காத்திருந்த ஷாக்!
Author: Udayachandran RadhaKrishnan9 April 2025, 11:23 am
திருப்பூர் கோவில்வழியை சேர்ந்தவர்கள் பாபு(வயது 47), இளையராஜா(38). பனியன் நிறுவன தொழிலாளர்கள். கொரோனா காலத்தில் பள்ளிக்கு செல்லாமல் இருந்த 15 வயது மாணவியிடம் நைசாக பேசி 2 பேரும் பாலியல் வன்கொடுமை செய்தனர்.
இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தாள். அவர்கள் தெற்கு மகளிர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாபு, இளையராஜா ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படியுங்க: தமிழ் மட்டுமே உயிர் மூச்சு… காமராஜரின் தொண்டன் : கடைசி வரை கட்சி மாறாத குமரி அனந்தன்!
இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பாபு, இளையராஜா ஆகியோருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி(பொறுப்பு) சுரேஷ்குமார் தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமிலா பானு ஆஜராகி வாதாடினார்.
இந்த வழக்கை சிறப்பாக நடத்தி தண்டனை பெற்றுக்கொடுத்த தெற்கு மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் பாராட்டினார்.