ஊட்டிக்கு கேஸ் சிலிண்டர் ஏற்றி சென்ற லாரி.. பர்லியார் அருகே பற்றி எரிந்த தீ : பரபரப்பில் விரைந்த தீயணைப்புத் துறை!

Author: Udayachandran RadhaKrishnan
12 December 2023, 4:59 pm

ஊட்டிக்கு கேஸ் சிலிண்டர் ஏற்றி சென்ற லாரி.. பர்லியார் அருகே பற்றி எரிந்த தீ : பரபரப்பில் விரைந்த தீயணைப்புத்துறை!

கோவை மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் பர்லியர் பகுதியில் பத்தடி பாலம் என்ற இடத்தில் கேஸ் நிரப்ப கொண்டுவரப்பட்ட 300 காலி சிலிண்டர்களுடன் TN 43 L7573 லாரி வாகனத்தின் ஓட்டுநர் தியாகராஜன் ஓட்டிக்கொண்டு வரும்போது லாரியின் இடதுபுற பின்பக்க டயர் உராய்வின் காரணமாக தீப்பற்றி எரிந்ததில் லாரியின் இடதுபுற டயர் மற்றும் ஒரு பகுதி சேதம் அடைந்தது.

தீப்பற்றி அறிவதாக கிடைத்த தகவலின் பேரில் மேட்டுப்பாளையம் தீயணைப்புத்துறை, காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு சென்றுஒரு மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது .

மேற்படி சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.தீ விபத்து காரணமாக மேட்டுப்பாளையம் உதகை சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு கோத்தகிரி சாலை வழியாக திருப்பி விடப்பட்டது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி