பைக் மீது நேருக்கு நேர் மோதிய லாரி… பெட்ரோல் டேங்கில் தீ பிடித்து கோர விபத்து… இளைஞர் பரிதாப பலி!!

Author: Udayachandran RadhaKrishnan
5 August 2023, 7:18 pm

பைக் மீது நேருக்கு நேர் மோதிய லாரி… பெட்ரோல் டேங்கில் தீ பிடித்து கோர விபத்து… இளைஞர் பரிதாப பலி!!

கோவை அருகே உள்ள கிணத்துக்கடவு சொக்கனூர் சாலையில் இன்று காலை 11 மணியளவில் இருசக்கர வாகனத்தில் ஒரு வாலிபர் சொக்கனூர் பகுதியில் இருந்து கிணத்துக்கடவை நோக்கி வடபுதூர் பகுதியில் வந்துள்ளார்.

அப்போது எதிரே சென்ற லாரி மோட்டார் சைக்கிள் இரண்டும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் பலமாக மோதியது. இதில் லாரியின் முன் பகுதியில் மோட்டார் சைக்கிள் சிக்கி சிறிது தூரம் இருசக்கர வாகனத்தை இழுத்து சென்ற லாரி ரோட்டோரம் நின்றது .

இதில் இருசக்கர வாகனத்தில் அடிபட்ட நபர் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து லாரி அருகில் இறந்துகிடந்தார். மோட்டார் சைக்கிள் லாரி மோதிய வேகத்தில் அதன் பெட்ரோல் டேங்க் வெடித்ததால் தீ லாரி மீது இருசக்கர வாகனத்தின் மீதும் மளமளான பரவி லாரியில் முன் பக்க டயர் முழுவதும் எரிந்து நாசமானது .

அதேபோல் இருசக்கர வாகனம் முழுவதும் எரிந்து நாசமானது. இது குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு கிணத்துக்கடவு போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று உயிரிழந்த நபரின் உடலை மீட்டு மோட்டார் சைக்கிள் மற்றும் லாரியில் பிடித்த தீயை தீயணைப்புத் துறையினர் தண்ணீர் பீய்ச்சி அடித்து அணைத்தனர்.

இதனால் சொக்கனூர் கிணத்துக்கடவு செல்லும் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணையில் இறந்த வாலிபர் கோவை அருகே உள்ள கண்ணமநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் வயது (20) என்பதும் இவர் இன்று காலை தனது ஊரிலிருந்து கிணத்துக்கடவை நோக்கி வந்த போது இந்த விபத்து நடந்ததாக போலீஸ் விசாரணை தெரிய வந்துள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 471

    0

    0