பீர் லோடு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து… ஆறு போல் ஓடிய பீர் : வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
31 July 2023, 4:18 pm

செங்கல்பட்டில் உள்ள பீர் கம்பெனியிலிருந்து கோவையில் சப்ளை செய்வதற்காக பீர் பாட்டில்களை ஏற்றிய லாரி ஈரோடு , செங்கப்பள்ளி வழியாக கோவை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது.

இன்று காலை செங்கப்பள்ளி அடுத்த பள்ள கவுண்டம்பாளையம் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக சாலையின் ஓரமாக இருந்த தடுப்பில் மோதி நிலை தடுமாறி தலைக்குப்பிற கவிழ்ந்தது.

இதில் லாரியில் வைக்கப்பட்டிருந்த பத்தாயிரம் பெட்டிகளில் இருந்த 25 ஆயிரத்து 200 பீர் பாட்டில்கள் சேதம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது இது குறித்த ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி
  • Close menu