இரண்டே மாதத்தில் மடிந்து போன காதல் திருமணம்… ஒரே அறைக்குள் நடந்த பகீர் சம்பவம் : தூத்துக்குடியில் பயங்கரம்!!
Author: Udayachandran RadhaKrishnan28 December 2022, 5:56 pm
தூத்துக்குடி : காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியினர் தற்கொலை செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி தருவைகுளம் அருகே உள்ள அனந்தமட பச்சேரி பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் தங்க முனியசாமி (வயது 28) இவரும் தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள தோவாரந்தை பகுதியை சேர்ந்த கீத்தா செல்வி(வயது 22) என்பரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இரு வீட்டாரின் பெற்றோர்கள் அனுமதியுடன் கடந்த அக்டோபர் 27-ம் தேதி திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையினை தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே திருமணம் முடிந்து சில நாட்களில் இருந்தே அடிக்கடி சின்ன சின்ன பிரச்சினைகள் வந்துள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி சண்டையிட்டு கொள்வதை வழக்கமாக வைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று இவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் வீட்டில் இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற தருவைகுளம் போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், ஊர் பொதுமக்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி அருகே பெற்றோர்கள் விருப்பத்துடன் காதல் திருமணம் செய்து கொண்ட காதலர்கள் 60-நாட்களே சேர்ந்து வாழ்ந்த நிலையில் அவர்களுக்குள் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை-யால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சமப்வம் அவர்களது குடும்பதினரிடம் மட்டுமின்றி அந்த ஊர் பொதுமக்களையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.