மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரோகித். அவரது மனைவி அஞ்சலி. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் உலக அமைதிக்காக கடந்த ஏப்ரல் மாதம் இருவரும் சைக்கிளில புறப்பட்டுள்ளனர்.
சைக்கிள் ஓட்டியபடியே மராட்டியம், கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்கள் சென்று பின்னர் தமிழகத்தில் கோவை வந்தனர். கோவையில் இருந்து , திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி சென்று விட்டு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி, ராமநாதபுரம் வழியாக நேற்று ராமேசுவரம் வந்தனர். அதைத்தொடர்ந்து இன்று மதியம் மதுரை காந்தி மியூசியம் வந்தனர்.
அவர்களுக்கு பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு மற்றும் காந்தி அருங்காட்சியக செயலாளர் நந்தாராவ் மற்றும் நடராஜன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மகாத்மாகாந்தியின் சுய சரிதை புத்தகம் வழங்கி கவுரவித்தனர்.
இது பற்றி ரோகித்-அஞ்சலி தம்பதி கூறியதாவது:- மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் இருந்து சைக்கிள் பயணத்தை தொடங்கினோம் என்றும் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சைக்கிள் ஓட்டியப்படியே செல்ல திட்டமிட்டுள்ளோம். லடாக்கில் எங்கள் பயணத்தை முடிக்க உள்ளோம்.
ராமேசுவரம், தனுஷ்கோடி வரை சென்று விட்டு மீண்டும் மதுரை வந்துள்ளோம். பாளையம் தென்காசி வழியாக கேரளா சென்று அங்கிருந்து மீண்டும் தமிழகம் வழியாக தெலுங்கானா ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்கள் செல்ல உள்ளதாக தெரிவித்தனர்.
பிக்பாஸ் தர்ஷன் திடீர் கைது… பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகப் பிரபலமாக அறியப்பட்டவர் தர்ஷன். இலங்கையை…
தூத்துக்குடி பாத்திமா நகர் 6வது தெருவை சேர்ந்தவர் ராஜ் (56) மீன்பிடித் தொழில் செய்து வரும் இவர் தற்போது மகிழ்ச்சிபுரம்…
திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் வகையில் அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சார்பில் தாம்பரத்தில் பொது கூட்டம் மற்றும் வீதி…
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
This website uses cookies.