சாலையோரம் நடந்து சென்றவர் மீது மோதிய சொகுசு கார் : தூக்கி வீசப்பட்ட நபர் பலி.. நிற்காமல் சென்ற கார்.. அதிர்ச்சி வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
2 November 2022, 2:51 pm

பல்லடம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தவர் மீது சொகுசு கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியான விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த வெட்டுப்பட்டான் குட்டை அருகே உணவகத்தில் பணி புரிந்து வருபவர் அண்ணாதுரை. புதுக்கோட்டையை சேர்ந்த இவர் கடந்த சில வருடங்களாக இங்கு தங்கியிருந்து பணி புரிந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று மதியம் இவர் தங்கியிருந்த அறையில் இருந்து உணவகத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த சொகுசு (இன்னோவா) கார் ஒன்று அவர் மீது மோதியது. மோதிய வேகத்தில் அண்ணாதுரை சாலை ஓரம் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்தார்.

விபத்தை ஏற்படுத்திய வாகனம் நிற்காமல் சென்றது.விபத்தினை பார்த்த அபகுதி பொதுமக்கள் அண்ணாதுரையை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

https://vimeo.com/766407190

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த பலடம் போலீசார் விபத்து ஏற்படுத்திய வாகனத்தையும் அதில் வந்த நபரையும் தேடி வருகின்றனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 769

    1

    0