திமுக கொடியுடன் நடுரோட்டில் சீறிப் பாய்ந்த சொகுசு கார்.. வசமாக சிக்கிய திமுக பிரமுகரின் மகன்.. (வீடியோ)!

Author: Udayachandran RadhaKrishnan
6 August 2024, 2:04 pm

மீஞ்சூர் – வண்டலூர் வெளிவட்ட சாலையில் அவ்வப்போது இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் சாகசங்களில் ஈடுபடுவதும், பைக் ரேஸ் செல்வதும் வாடிக்கையாக உள்ளது. அண்மையில் ஆட்டோ ரேஸ் நடத்தப்பட்டு அந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்களும் உயிரிழந்திருந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

காவல்துறையினரும் அவ்வப்போது ரேசில் ஈடுபடும் காட்சிகளைக் கொண்டு கைது நடவடிக்கையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சூழலில் மீஞ்சூர் – வண்டலூர் வெளிவட்ட சாலையில் கும்மனூர் அருகே திமுக கொடிகளுடன் சொகுசு கார்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சென்றன. காரில் உள்ள மேற்பரப்பை திறந்து விட்டு இளைஞர்கள் நின்றபடி அதிவேகமாக செல்வதும் ஒரே இடத்தில் 4, 5 கார்கள் புழுதி பறக்கும் வகையில் வட்டமளித்தபடி சுற்றிக் கொள்வதுமாக திமுக கொடி கட்டப்பட்ட இந்த கார்களின் சாகச வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வந்தது.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வாகன பதிவெண் கொண்டு 4பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சோழவரம் திமுக வடக்கு ஒன்றிய துணை செயலாளர் சுந்தரமூர்த்தி – சோழவரம் ஊராட்சி ஒன்றிய 3வது வார்டு கவுன்சிலர் கனிமொழி ஆகியோரது மகன் நவீன் காரை அபாயகரமாக ஓட்டியது தெரிய வந்தது. இதனையடுத்து திமுக பிரமுகரின் மகன் நவீனுக்கு போலீசார் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

அதிவேகமாவும், அபாயகரமாகவும் வாகனத்தை இயக்கியதாக திமுக பிரமுகர் மகன் நவீனுக்கு செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் அபராதம் விதித்தனர். அபராதம் விதிக்கப்பட்டதை தொடர்ந்து திமுக பிரமுகர் நவீன் மற்றும் அவரது நண்பர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…