திடீரென ஆடையைக் கழற்றிய இளைஞர்.. ஷேர் ஆட்டோவில் ஆபாச செயல்.. வெளியான ஷாக் வீடியோ!

Author: Hariharasudhan
13 December 2024, 1:29 pm

மும்பையில், ஷேர் ஆட்டோவில் செல்லும்போது அருகில் இருந்த இளைஞர் ஆபாசமான செயலில் ஈடுபட்டதாக கல்லூரி மாணவி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின், தெற்கு மும்பையில் உள்ள கல்லூரியில் மாணவி ஒருவர் படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த நவம்பர் 30ஆம் தேதி, தான் படிக்கும் கல்லூரியில் இருந்து கிராண்ட் சாலை செல்லும் வழியில் ஷேர் ஆட்டோ (Share Auto) ஒன்றில் ஏறி பயணித்து உள்ளார்.

இவ்வாறு மாணவி பயணித்தது ஷேர் ஆட்டோ என்பதால், அதில் ஏற்கனவே இளைஞர் ஒருவரும் அமர்ந்திருந்து உள்ளார். இந்த நிலையில், ஷேர் ஆட்டோவில் ஏறிய கல்லூரி மாணவியும், அந்த இளைஞரின் அருகில் அமர்ந்து உள்ளார். பின்னர் அந்த ஷேர் ஆட்டோ சிறிது தூரம் சென்று உள்ளது.

A man misbehave in Share taxi in south Mumbai

இளைஞர் செய்த கொடூரம்: இந்த நிலையில், அந்த இளைஞர் கல்லூரி மாணவியைப் பார்த்துக் கொண்டே, தனது ஆடையைக் கழற்றி அறுவறுக்கத்தக்கும் வகையில் (A man sexual activity in Auto at Mumbai) ஆபாசமாக நடந்து கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கல்லூரி மாணவி, கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

இதையும் படிங்க: ‘யாருனு தெரியாது.. ஆனா கொன்னுட்டேன்..’ முதியவர் அளித்த பகீர் வாக்குமூலம்

மேலும், பாதிக்கப்பட்ட மாணவி இளைஞரின் செயலை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். இந்த நிலையில், இந்த அறுவறுக்கத்தக்க வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். இதில் இடம் பெற்ற இளைஞரின் செயலுக்கு நெட்டிசன்கள் தங்களது கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

A man misbehave in Share auto in Mumbai

இதனிடையே, வீடியோவை வெளியிட்ட நபர், ஒரு பெண்ணுக்கு பொது இடத்தில் இருக்கக்கூடிய பாதுகாப்பை கேள்வி எழுப்பியது மட்டுமல்லாமல், இது குறித்து மும்பை போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டு உள்ளார்.

இதனையடுத்து, இந்தப் பதிவிற்கு பதில் அளித்துள்ள மும்பை போலீஸ், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சம்பந்தப்பட்ட வீடியோ சார்ந்து வேறு ஏதும் ஆதாரம் இருந்தால் வழங்குங்கள் என்றும் கேட்டுள்ளது. தற்போது இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Vijay Sethupathi special birthday video விஜய் சேதுபதியை அழ வைத்த படக்குழு…பிறந்த நாள் அதுவுமா இப்படியா..வைரலாகும் வீடியோ..!