45 வயது ஆணுடன் சென்ற பள்ளி மாணவி.. காட்டுக்குள் சடலமாக மீட்கப்பட்ட பகீர்!

Author: Hariharasudhan
11 March 2025, 11:22 am

கர்நாடகாவில் 45 வயது ஆண் மற்றும் 10ம் வகுப்பு மாணவி காணாமல் போன நிலையில், காட்டுக்குள் இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர்.

பெங்களூரு: கர்நாடக மாநிலம், பைவளிகே பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் (42). ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வந்த இவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்துள்ளார். இதனிடையே, இவர் தனது பக்கத்து வீட்டில் உள்ள 10ஆம் வகுப்பு படிக்கும் மனைவியுடன் பழகி வந்துள்ளார்.

இருவருக்கும் இடையே வயது வித்தியாசம் உள்ளதால், அவர்களுக்கிடையேயான தொடர்பை யாரும் சந்தேகிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி மாணவி திடீரென காணாமல் போயுள்ளார். இதனையடுத்து, அவரது பெற்றோர் மாணவியின் செல்போனை தொடர்பு கொண்டுள்ளனர்.

ஆரம்பத்தில் போன் கால் சென்ற நிலையில், பின்னர் மொபைல் போன் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது. மேலும், பக்கத்து வீட்டில் வசித்த ஆட்டோ ஓட்டுநர் பிரதீப்பும் காணாமல் போக, அடுத்த சில நாட்கள் கழித்து, மாணவி தனது உறவினருக்கு அனுப்பிய புகைப்படங்களில், ஆட்டோ ஓட்டுநருடம் மிக நெருக்கமாக இருக்கும் படங்கள் இருந்துள்ளன.

Deaths in Karnataka

எனவே, மாணவியின் பெற்றோர், அவர் பிரதீப்புடன் சென்றிருப்பதை உறுதி செய்து, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும், ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்ய, அதன் பேரில் நீதிமன்றம் போட்ட உத்தரவின்படி போலீசார் தீவிரமாக தேடுதல் பணியில் இறங்கினர்.

இதையும் படிங்க: அவன் சரியான ஊமக் குசும்பன்.. செம PLAY BOY : ஜெய் குறித்து கவர்ச்சி நடிகை ஓபன்!

இந்த நிலையில், இருவரின் செல்போன் சிக்னல் காட்டுப் பகுதியில் இருப்பது தெரிய வந்துள்ளது. பின்னர், உடனடியாக வனப்பகுதியில் தேடுதல் மேற்கொள்ளப்பட்டபோது, மாணவி மற்றும் பிரதீப் இருவரும் மரத்தில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளனர்.

ஆனால், சம்பவ இடத்தில் தற்கொலை கடிதம் எதுவும் இல்லை. இருப்பினும், இருவரின் செல்போன்கள், ஒரு கத்தி மற்றும் சாக்லேட் ஆகியவை மட்டும் கிடைத்துள்ளன. தொடர்ந்து, இருவரின் சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • it is not easy to direct salman khan ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?