யாசகம் பெறும் பெண் கர்ப்பம்.. மேஸ்திரியின் அந்த நிமிடம்.. திருச்சியில் திடுக் பின்னணி!
Author: Hariharasudhan13 February 2025, 1:07 pm
திருச்சியில், யாசகம் பெறும் பெண்ணைக் கர்ப்பமாக்கி கொன்ற நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
திருச்சி: திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் கடந்த ஜனவரி 3ஆம் தேதி, சென்னை – திருச்சி சாலையோர முட்புதரில், அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலத்தை சமயபுரம் போலீசார் மீட்டனர். இதனையடுத்து, பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு பெண்ணின் சடலத்தை அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, அந்த பெண் மிகக் கொடுமையாக கொல்லப்பட்டிருப்பதாக பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்துள்ளது. இதனால், விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீசாருக்கு சிக்கல் நீடித்தது. காரணம், பெண் யாரும் காணாமல் போனதாக புகாரும் வரவில்லை, சடலம் கிடந்த பகுதியில் எந்த சிசிடிவி கேமராவும் இல்லை.
இருப்பினும், அந்த இடத்தைச் சுற்றி சற்று தொலைவில் உள்ள இடங்களில் இருந்த சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், கொலை செய்யப்பட்ட பெண்ணைப் போலவே, ஒருவர் நடந்து சென்று கொண்டிருப்பதும், அவரை பின்தொடர்ந்து இன்னொரு நபர் சென்று கொண்டிருப்பதும் பதிவாகியிருந்தது.
இதனையடுத்து, நடத்தப்பட்ட விசாரணையில், திருப்பூர் பேருந்து நிலையத்தில், அந்த நபர் இருப்பதை உறுதி செய்த போலீசார், அவரைக் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், அவர் சிவா என்ற விக்னேஷ் (32) என்பது தெரிய வந்துள்ளது.
இதன்படி, திருமணமாகாத விக்னேஷ், தன்னுடைய அண்ணனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வீட்டைவிடடு வெளியே வந்துள்ளார். பின்னர், பல இடங்களில் மேஸ்திரி வேலை பார்த்து வந்த அவர், எங்கு வேலைக்குச் செல்கிறாரோ, அங்கிருக்கும் கோயில், பேருந்து நிலையத்தில் தங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில், ஶ்ரீரங்கத்தில் ஒருநாள் கொத்தனாராக வேலை செய்துவிட்டு கோயிலில் தங்கிய போதுதான், யாசகம் வாங்கும் பெண்ணுடன் விக்னேஷுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்பெண்ணுக்கு திருமணமாக கணவரைப் பிரிந்து வாழும் நிலையில், இருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டு உல்லாசமாக இருந்துள்ளனர்.
இதையும் படிங்க: ’அரைகுறை ஆடை அணியும் பெண்கள்’.. முக்கிய சினிமா பிரபலம் சர்ச்சை கருத்து!
இதனையடுத்து, அந்தப் பெண் விக்னேஷிடம், தான் கர்ப்பமாக உள்ளதாகவும், அதனைக் கலைக்க 13 ஆயிரம் வேண்டும் என்றும் கேட்டுள்ளார். பின்னர், இரண்டு நாட்கள் கழித்து வந்தப் பெண்ணை சமயபுரம் பகுதியில் சந்தித்த விக்னேஷ், மீண்டும் அப்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
அப்போது அந்தப் பெண்ணிடம், தான் கொடுத்த பணத்தைப் பற்றி கேட்டுள்ளார். இதனால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த விக்னேஷ், அப்பெண்ணின் சேலையிலேயே அவரது கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளது தெரிய வந்துள்ளது.