நண்பரின் மனைவி குறித்து அவதூறு.. கறி வெட்டும் கத்தியால் பறிபோன உயிர்!

Author: Hariharasudhan
22 October 2024, 4:46 pm

குடிபோதையில் நண்பரின் மனைவியை பற்றி அவதூறாக பேசியவரை கொலை செய்த நபரை திருப்பூர் நல்லூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், காசிபாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்தி (40). இவர் அதே பகுதியில் இறைச்சி கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று (அக்.21), தனது நண்பர் முத்துராஜா (39) என்பவருடன் சேர்ந்து நல்லூர், எம்.ஆர்.ஜி நகர் பகுதியில் உள்ள வடிவேல் என்பவர் வீட்டிற்கு மது அருந்துவதற்காகச் சென்றுள்ளனர். இதனையடுத்து, அங்கு மூன்று பேரும் மது அருந்திக் கொண்டிருந்தனர்.

அப்போது, முத்துராஜாவின் மனைவி குறித்து கார்த்தி தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மது போதையில் இருந்த இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் இந்த வாய்த்தகராறு முற்றிய நிலையில், கார்த்திக் கொண்டு வந்திருந்த கறி வெட்டும் கத்தியை எடுத்த முத்துராஜா, கார்த்தியை சரமாரியாக வெட்டினார்.

Crime

இதில் ரத்த வெள்ளத்தில் கார்த்திக் சரிந்து விழுந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர் அலறியுள்ளார். இவ்வாறான அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து முத்துராஜாவைப் பிடித்துள்ளனர். மேலும், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து கிடந்த கார்த்திக்கை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் உயிரிழந்தார்.

இதையும் படிங்க: ஆந்திராவில் தர்பார் பட பாணியில் கூட்டு பாலியல் வன்கொடுமை.. சிறுவர்கள் கைது

இதனையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த நல்லூர் போலீசார், முத்துராஜாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…