படுக்கையறை வரை சென்ற பால்ய நண்பன்.. ஸ்குரு டிரைவரால் குத்திக் கொலை செய்த கொடூரம்!
Author: Hariharasudhan11 March 2025, 5:55 pm
சென்னையில் நண்பரின் மனைவியுடன் பழகிய நண்பரைக் கொலை செய்து சாக்கு மூட்டையில் வீசிச் சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை: சென்னை, கொருக்குப்பேட்டை பிபிசிஎல் அருகே ரத்தக்கரையுடன் ஒரு சாக்கு மூட்டை கிடந்துள்ளது. மேலும், அந்த சாக்கு முட்டையில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. எனவே, இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதன்படி சம்பவம் இடத்திற்குச் சென்ற போலீசார், அந்த மூட்டையைப் பிரித்து பார்த்துள்ளனர். அப்போது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ரத்தக் காயங்களுடன் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதனையடுத்து, அவரது உடலை மீட்ட போலீசார், அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சாக்கு மூட்டையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டவர், பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், சிறு வயதிலிருந்தே சதீஷ்குமாரும், கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சரத்குமார் என்பவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர்.

இந்த நிலையில், சதீஷ்குமார் தனது நண்பர் சரத்குமாரின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது, சரத்குமாரின் மனைவிக்கும், சதீஷ்குமாருக்கும் இடையே திருமணத்தை மீறிய பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது ஒருகட்டத்தில் சரத்குமாருக்கு தெரிய வந்துள்ளது. எனவே, இது தொடர்பாக தனது நண்பரையும், மனைவியையும் சரத்குமார் கண்டித்துள்ளார்.
இதையும் படிங்க: ‘ஜனநாயகன்’ படத்தில் களமிறங்கும் முக்கிய இயக்குனர்கள்…விஜய் போட்ட ஸ்கெட்ச்சா.!
இந்த நிலையில், கடந்த மார்ச் 3ஆம் தேதி சதீஷ்குமார், சரத்குமாரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். இதனால் கோபமடைந்த சரத்குமாருக்கும் சதீஷ்குமாருக்கும இடையே பெரிய தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சத்திற்கே சென்ற சரத்குமார், வீட்டிலிருந்த ஸ்குரு டிரைவர் மற்றும் கத்தியால் சதீஷ்குமாரை குத்திக் கொலை செய்துள்ளார்.
பின்னர், அவரது உடலை சாக்கு முட்டையில் கட்டி வீசியுள்ளார். இதனையடுத்து, சரத்குமாரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
