ஹைதராபாத்தில் பதுங்கிய நபர்.. விரைந்த தனிப்படை.. சத்தீஸ்கர் பத்திரிகையாளர் கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

Author: Hariharasudhan
6 January 2025, 6:55 pm

சத்தீஸ்கர் பத்திரிகையாளர் கொலை வழக்கில், முக்கிய நபரை ஹைதராபாத்தில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஹைதராபாத்: சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் முகேஷ் சந்திரகர். இவர் அங்குள்ள் ஒரு முன்னணி செய்தி நிறுவனம் மற்றும் பிற செய்தி சேனல்களில் நிருபராக பணியாற்றி வந்தார். மேலும், பஸ்தர் ஜங்ஷன் என்ற யூடியூப் சேனலையும் அவர் நடத்தி வந்தார். இந்த யூடியூப் சேனலுக்கு 1,59,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்களும் உள்ளனர்.

இதனிடையே, கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரலில், மாவோயிஸ்ட் கட்டுப்பாட்டில் இருந்த கோப்ரா கமாண்டோ ராகேஷ்வர் சிங் மன்ஹாஸை விடுவிப்பதில், பத்திரிகையாளர் முகேஷ் சந்திரகர் முக்கிய பங்கு வகித்தார். இந்த நிலையில், கடந்த ஜனவரி 1ஆம் தேதி முகேஷ் சந்திரகர் (33) காணாமல் போனார்.

இதனையடுத்து, பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, முகேஷ் காணாமல் போன 24 மணி நேரத்திற்குப் பிறகு, ஜனவரி 2ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு, கோட்வாலி காவல் நிலையத்தில், முகேஷின் சகோதரர் யுகேஷ் சந்திரகர் புகார் அளித்தார்.

Main accused arrested in chhattisgarh journalist Killed at Hyderabad

இதனையடுத்து வழக்கை மேலும் விசாரிக்க, பிஜாப்பூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளரின் கீழ் சிறப்பு புலனாய்வுக் குழு அடங்கிய தனிப்படையை கடந்த சனிக்கிழமை அமைத்தனர். இதில் தனிப்படை போலீசார், சத்தீஸ்கர் பத்திரிகையாளர் கொலைக்கு பிஜப்பூரில் சாலை அமைக்கும் பணிகளில் நடந்த ஊழல்களைச் செய்தியாக வெளியிட்டதே காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை நடத்தினர்.

மேலும், இதுகுறித்து சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மாவும், இதே விஷயத்தில் சந்தேகம் தெரிவித்திருந்தார். இதனால் முகேஷ் கொலைக்கு ஒப்பந்ததாரர் சுரேஷ், சந்திரகர் தனது பணியில் தலையிடுவதாக அவரது சகோதரர் ரித்தேஷ் சந்திரகருக்கும், முகேசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இதனையடுத்து போலீசார், முகேஷ் சடலத்தை ஜனவரி 3ஆம் தேதி சாத்தான் பாரா பகுதியில் உள்ள ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரகர் வீட்டு வளாகத்தில் புதிதாக மூடப்பட்ட கழிவுநீர் தொட்டியில் கண்டெடுத்தனர். அதில், முகேஷ் சந்திரகரின் தலை, முதுகு, வயிறு மற்றும் மார்பு பகுதிகளில் பலத்த காயங்கள் இருந்ததாக உடற்கூறு ஆய்வு அறிக்கையில் தெரிய வந்தது.

எனவே, முகேஷ் சந்திரகர் கொலைக்கு முன்பு கடுமையாக தாக்கி கொடுமைப்படுத்தப்பட்டதை போலீசார் உறுதி செய்தனர். இதனையடுத்து,
சுரேஷ் சந்திரகரின் சகோதரர் ரித்தேஷ் சந்திரகர், மேற்பார்வையாளர் மகேந்திர ராம்தேகே மற்றும் தினேஷ் சந்திரகர் ஆகியோரை போலீசார் ஏற்கனவே கைது செய்த நிலையில், சுரேஷ் சந்திரகரை கண்டுபிடிக்க 200 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதையும் படிங்க: ’தமிழகத்தில் எமர்ஜென்சி’.. CPIM-ஐ தொடர்ந்து ஆளுநர்.. திமுகவின் நிலைப்பாடு என்ன?

300 மொபைல் எண்கள் கண்காணிப்பில் வைத்து, சுரேஷின் மனைவியிடம் விசாரணை நடத்தியதோடு, அவரது வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன. இந்த நிலையில், சுரேஷ் சந்திரகர் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள தனது ஓட்டுநர் வீட்டில் பதுங்கியிருப்பதை அறிந்த தனிப்படை போலீசார், அவரை திங்கள்கிழமை அதிகாலையில் சுரேஷ் சந்திராகரை கைது செய்தனர்.

அதேநேரம், சுரேஷ் சந்திராகர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் எனக் கூறி வந்த நிலையில், இதற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில தகவல் தொடர்பு துறையின் தலைவர் சுஷில் ஆனந்த் சுக்லா மறுத்துள்ளார். சுரேஷ் சந்திரகர் சில ஆண்டுக்கு முன்பு பாஜகவில் முன்னாள் மாவட்டத் தலைவர் ஜி.வெங்கட் முன்னிலையில், அக்கட்சியில் இணைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

  • Tom Holland and Zendaya gets engaged SPIDER MAN ரீல் ஜோடி ரியல் ஜோடியாகிறது.. முடிவுக்கு வந்த 4 வருட டேட்டிங்!
  • Views: - 57

    0

    0

    Leave a Reply