மழையில் ஒரு கைதி.. கொட்டும் மழையில் நடுரோட்டில் பிரியாணி விருந்து!

Author: Hariharasudhan
26 October 2024, 3:25 pm

திண்டுக்கல் வத்தலக்குண்டு அருகே கொட்டு மழையில் நடுரோட்டில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட நபரின் வீடியோ வைரலாகி வருகிறது.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டில் நேற்று (அக்.25) மாலையில் கனமழை கொட்டியது. பின்னர், மழை குறைந்து சாரல் விழுந்து கொண்டிருந்தது. அப்போது, கனமழைக்கு ஒதுங்கிய அனைவரும் சாரல் மழையில் வெளியேறத் தொடங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், காளியம்மன் கோவில் நான்கு முனை சந்திப்பில், மழை விடுவதற்காக காத்திருந்தது போன்ற ஒருவரும் காத்திருந்தார்.

Biryani

சிவப்பு சட்டை அணிந்திருந்த அவர், நடுரோட்டில் தான் கொண்டு வந்த வாழை இலையை விரித்தார். பின்னர், பையில் வைத்திருந்த சிக்கன் பிரியாணியை இலையில் போட்டு சாப்பிடத் தொடங்கினார். அப்போது, அவரைக் கடந்து பேருந்துகள், கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் ஆகியவை கடந்து சென்று கொண்டே இருந்தன.

இதையும் படிங்க: திருப்பதியை அலற விட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்.. ஹோட்டல்களில் போலீசார் அதிரடி ரெய்டு!

இருப்பினும், அவர் எதைப் பற்றியும் நினைக்காமல், சிக்கன் லெக் பீஸை கையில் எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இதன் பின்னர், மிகவும் திருப்தியாக சாப்பிட்டு முடித்த அந்த நபர், பெய்து கொண்டிருந்த மழையிலேயே கையைக் கழுவி விட்டுச் சென்றார். இந்த நிலையில், இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • Shihan Hussaini Body Donation என் உடலை தானம் செய்கிறேன்..ஆனால் ‘இதயம்’..ஷிஹான் ஹுசைனி உருக்கமான வேண்டுகோள்.!