போட்டோ எடுக்கச் சொன்ன சுற்றுலாப்பயணி.. கார் மோதி பலியான உள்ளூர்வாசி!

Author: Hariharasudhan
1 January 2025, 2:14 pm

குமரிக்கு வந்த சுற்றுலாப் பயணிகளை போட்டோ எடுக்க முயன்ற நபர் கார் மோதி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி: திருச்சியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவர், குமரி மாவட்டம் நான்குவழிச் சாலையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், இன்று அதிகாலை நான்குவழிச் சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டு இருந்து உள்ளார்.

அப்போது, குமரிக்கு சுற்றுலா வந்த பயணிகள், தங்களை புகைப்படம் எடுத்துத் தருமாறு உதவி கேட்டு உள்ளார். இதற்கு உதவுவதாகக் கூறிய பாலசுப்பிரமணியம், அவர்களை போட்டோ எடுக்க முயன்று உள்ளார். அப்போது, அங்கு சொகுசு கார் ஒன்று அதிவேகமாக வந்துள்ளது.

Kanyakumari accident

இந்த சொகுசு கார் மோதியதில், பாலசுப்பிரமணியல் பலத்த காயங்கள் உடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து, இது குறித்து அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து பாலசுப்பிரமணியத்தின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: ‘நாடா? சுடுகாடா?’.. ஒரு வாரமாகியும் முடங்கிக் கிடக்கும் விசாரணை.. அன்புமணி கடும் தாக்கு!

தொடர்ந்து, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு, குமரிக்கு வந்த சுற்றுலாப் பயணிகளை போட்டோ எடுக்க முயன்ற நபர் கார் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • Tamannaah Vijay Varma relationship காதலனுக்கு அரிய வகை நோய் உறுதி…வேதனையில் நடிகை தமன்னா..!
  • Views: - 109

    0

    0

    Leave a Reply