குழந்தையை கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆன கள்ளக்காதலன்.. விற்க நினைத்த காதலி திடுக்!
Author: Hariharasudhan26 March 2025, 2:52 pm
கோவையில், கள்ளக்காதலில் இருந்த பெண்ணுக்கு பிறக்கும் குழந்தையை தவிக்கவிட்டு சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த டி.கோட்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவர் ஏற்கனவே திருமணமாகிய நிலையில், மனைவி உள்ளார். இதனிடையே, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தியாகராஜனுக்கும், 28 வயது பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். இதன் காரணமாக, அப்பெண் கர்ப்பமாகியுள்ளார். ஆனால், கருவைக் கலைக்க வேண்டும் என தியாகராஜன் கூறியுள்ளார். ஆனால், 5 மாத கருவைக் கலைக்க முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, நிறை மாத கர்ப்பிணியான இளம்பெண், தாராபுரத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு இளம்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. மேலும், மருத்துவ சிகிச்சைக்கு பணம் தருவதாகக் கூறிய தியாகராஜன் தலைமறைவாகியுள்ளார்.

இதனால், அந்தப் பெண் தனக்கு அறிமுகமான மற்றொரு பெண்ணிடம் நிலைமையைக் கூறியுள்ளார். இந்தக் குழந்தையை தன்னால் வளர்க்க முடியாது என்றும், தனக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற இருப்பதாகக் கூறி, மதுகரையைச் சேர்ந்த ஒருவரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு குழந்தையை விற்று, மருத்துவமனை கட்டணத்தைச் செலுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: தற்கொலை செய்ய துணிந்த மனோஜ்.. காப்பாற்றிய மனைவி : 8 வருடமாக பட்ட கஷ்டம்!
ஆனால், சட்டப்படி குழந்தையை தத்துக் கொடுக்கவில்லை. இதனிடையே, இது குறித்து அறிந்த ஊர் மக்கள், அந்தப் பெண்ணை அவதூறாகப் பேசியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட பெண், தன்னை ஏமாற்றிய தியாகராஜன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், நேற்று முன்தினம் தியாகராஜனைக் கைது செய்தனர்.