உயிருக்கே ஆபத்தான உறக்கம்… ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற பயணி… கடவுள் போல வந்து காப்பாற்றிய போலீசார்..!!

Author: Babu Lakshmanan
23 September 2022, 11:30 am

கோவை : ஓடும் ரயில் தவறி விழுந்த முதியவரை கண் இமைக்கும் நேரத்தில் உடனடியாக காப்பாற்றிய ரயில்வே போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

சேலத்தை சேர்ந்த சிவகுமார் என்பவர் கேரளா கண்ணூர் சென்று கோயமுத்தூர் திரும்பியிருக்கின்றார். கோயமுத்தூரில் இறங்க வேண்டிய அவர் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுள்ளார். ரயில் கோவை ரயில் நிலையம் வந்து, பின்னர் புறப்படும் போது உடனடியாக அவர் விழித்துக்கொண்டு ஓடும் ரயிலிலிருந்து இறங்க முயன்றார்.

அப்போது, நிலை தடுமாறு கீழே விழுந்தார். இதனால், தண்டவாளத்துக்கு அடியில் தடுமாறி விழுந்தார். அப்போது, பணியில் இருந்த ரயில்வே இருப்பு பாதை காவல் நிலைய குற்றப்பிரிவு தலைமை காவலர் (203) ரமேஷ், காவலர் (1025) மாரிமுத்து, மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் அருண்ஜித், பெண் தலைமை காவலர் மினி, ஆகியோர் தண்டவாளத்தில் விழுந்த நபரான சேலத்தை சேர்ந்த சிவகுமாரை கண் இமைக்கும் நேரத்தில் காப்பாற்றினர். இதனால் சிவகுமார் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

பின்னர், அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கண் இமைக்கும் நேரத்தில் விபத்துக்குள்ளான நபரை லாவகமாக காப்பாற்றிய கோயமுத்தூர் ரயில்வே காவலர்களை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 434

    0

    0