EMI ஏஜெண்ட் முன்பே பைக்கை தீ வைத்து எரித்த இளைஞர்.. காரணம் என்ன?

Author: Hariharasudhan
25 November 2024, 6:06 pm

தெலுங்கானாவில் EMI செலுத்தாத இளைஞர், திடீரென கடனில் வாங்கிய பைக்கை ஏஜெண்டுகள் முன்பே எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஷிவம்பேட்டை: தெலங்கானா மாநிலம், மேடக் மாவட்டம் ஷிவம்பேட்டையில் இளைஞர் ஒருவர் தங்கி உள்ளார். இவர் சமீபத்தில் இஎம்ஐ மூலம் பைக் வாங்கியுள்ளார். இதனையடுத்து, மாதந்தோறும் தவறாமல் தவணையைச் செலுத்தி வந்து உள்ளார். ஆனால், இந்த மாதம் சில காரணங்களால் பைக்கின் தவணையைச் செலுத்த முடியவில்லை எனத் தெரிகிறது.

Bike fire in Telangana

இதனால் நிதி நிறுவன ஏஜென்ட்களிடம் இளைஞருக்கும் இருந்து போன் அழைப்புகள் வரத் தொடங்கி உள்ளன. அப்போது, அந்த இளைஞர் பணம் செலுத்த சிறிது காலம் தருமாறு கேட்டு உள்ளார். ஆனால், நிதி நிறுவனத்தின் முகவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து உள்ளனர். இறுதியாக, பைக்கிற்கான தவணையைச் செலுத்த வேண்டும் என்று கூறி, அந்த இளைஞரின் வீட்டிற்கு வந்து கூறி உள்ளனர்.

இதையும் படிங்க: 3 பேரின் உயிரைக் கொன்ற கூகுள் மேப்.. உ.பியில் சோகம்!

இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், நிதி நிறுவன முகவர்கள் பார்த்து கண் முன்னே பைக்கிற்கு தீ வைத்து எரித்து உள்ளார். இதில் பைக் முற்றிலும் எரிந்து இருக்கிறது. பின்னர், இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?