ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மனநலம் பாதித்த பெண்… கற்பழிக்க முயன்ற 58 வயது முதியவர்… 2 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த தண்டனை!!
Author: Babu Lakshmanan27 January 2023, 4:55 pm
கரூர் : மன வளர்ச்சி குன்றிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 58 வயது முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்த கரூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கரூர் சோமூர் பகுதியைச் சேர்ந்த மன வளர்ச்சி குன்றிய 28 வயது பெண் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 58 வயதான அர்ஜூனன், கடந்த 2020 ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி அன்று அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார்.
இது குறித்த கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீசில் மன வளர்ச்சி குன்றிய பெண்ணின் தாயார் புகார் அளித்தார். விசாரணை நடத்திய போலீசார் அர்ஜுனனை கைது செய்தது,தொடர்ந்து வழக்கானது கரூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கின் சாட்சியங்களை விசாரணை செய்து, குற்றம் சாட்டப்பட்ட முதியவர் அர்ஜுனனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கரூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி நசீமா பானு இன்று தீர்ப்பளித்தார்.