பெற்ற குழந்தைக்கே பாலியல் தொல்லை கொடுத்த கொடூரத் தந்தை : நீதிமன்றம் புகட்டிய சரியான பாடம்..!!

Author: Babu Lakshmanan
20 July 2022, 9:40 pm

விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூர் பெற்ற குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு 4 ஆயுள் தண்டனையும் 20 ஆயிரம் அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மகாராஜபுரத்தை சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தான் பெற்ற 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கப்பட்டு வந்தது.

மேலும், இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு கூறிய மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி பூர்ண ஜெயஆனந்த் பெற்றகுழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை சுந்தர்ராஜ்க்கு 4 ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். அதனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் அவருக்கு 20 ஆயிரம் அபராதம் விதித்தும் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தமிழக அரசு ரூபாய் 10 லட்சம் வழங்க பரிந்துரை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி