தந்தையின் திருடுபோன செல்போன்… திருடனை கண்டுபிடிக்க உதவிய கூகுள் மேப்… மகனின் சாமர்த்தியமான சேஸிங்…!!

Author: Babu Lakshmanan
7 February 2024, 10:23 am
Quick Share

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் ஏறிய முதியவரின் திருடுபோன தொலைபேசியை அவரது மகன் கூகுள் மேப்பின் உதவியுடன் திருடனை கண்டுபிடித்த சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த ராமன்புதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ பகத். இவர் தொழில்நுட்ப வல்லுநராக வேலை செய்து வருகிறார். இவரது தந்தை பழனிசாமி ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் அதிகாரியாக இருந்து வருகிறார். மேலும், சிஐடியு தொழிற்சங்கத்தில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை நாகர்கோவிலில் இருந்து திருச்சி செல்வதற்காக கச்சேகுடா எக்ஸ்பிரஸ் ரயிலில் சுமார் அதிகாலை 1.45 மணி அளவில் ரயிலில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து ஏறினார். ரயிலில் போதுமான அளவு கூட்டமில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் அவருடன் ஒரு நபர் குடிபோதையில் ரயிலில் ஏறியதாகவும் கூறப்படுகிறது.

ரயில் திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்தபோது, பழனிச்சாமியின் பை மற்றும் பையில் வைத்திருந்த தொலைபேசியை காணவில்லை. ரயில் கோவில்பட்டி வந்ததும் தனது பையை தேடினார் பழனிச்சாமி. பை இல்லாததை
கண்டு அதிர்ச்சி அடைந்தார் பழனிச்சாமி. உடனே தனது மகனான ராஜபகத்திற்கு அருகில் இருப்பவரிடம் தொலைபேசியை வாங்கி தனது தொலைபேசி தொலைந்ததை தனது மகனிடம் கூறியுள்ளார்.

இந்த நிலையில், ராஜ்பகத் தனது உறவினர்கள் யார் எங்கு சென்றாலும், அவர்கள் இங்கு இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்கு கூகுள் மேப்பில் உள்ள லொக்கேஷன் ஆன் செய்து வைப்பது வழக்கமாக வைத்துள்ளார். இந்த லொக்கேஷன் ஆன் செய்து வைத்ததன் மூலம் தொலைபேசி எங்கு இருக்கிறது என்று கண்டுபிடிக்க இயலும். தனது தந்தை கூறியதும் உடனே ராஜ பகத் தனது நண்பருடன் லொகேஷனை தனது தொலைபேசியில் பார்த்துள்ளார். அப்போது லொகேஷன் திருநெல்வேலி பகுதியில் இருந்துள்ளது.

தொடர்ந்து திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இருந்து நகர்ந்துவந்தது. இதை கண்டதும் செல்ஃபோன் திருடு போனது உறுதி செய்யப்பட்டது. இந்த தொலைபேசியை எடுத்த நபர் திருநெல்வேலியில் இறங்கி கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் திரும்பி நாகர்கோவிலில் வந்தது லொகேஷன் டிராக் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே ரயில் நாகர்கோவில் ரயில் நிலையம் அதிகாலை வந்ததும் அங்கு போய் ராஜபகத் பார்த்துள்ளார். அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் திருடனை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால் தொடந்து லொகேஷன் நகர்ந்து கொண்டே இருந்தது.

லொகேஷனை பின் தொடந்த ராஜ பகத் இறுதியாக நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் வைத்து திருடனை பிடித்துள்ளார். உடனே காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே போலீசார் வந்து விசாரித்த போது திருடன் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. திருடனை விசாரித்த போலீசார் அவன் திருடிய தொலைபேசி, 1000 ரூபாய் ரொக்க பணம், சார்ஜர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து குடிபோதையில் இருந்ததால் இந்த நபர் முன்னுக்கு பின் முரணாகவே பேசி உள்ளார். தொலைபேசி கிடைத்ததால் ராஜபகத் புகார் அளிக்கவில்லை. அதனால், காவல்துறையினர் இது குறித்து மேல் நடவடிக்கை எதும் எடுக்கவில்லை. ரயில், பேருந்தில் பயணம் செய்யும்போது இந்த கூகுள் மேப் லொகேஷனை உறவினர்களுக்கும் அனுப்பும்போது நாம் எங்கு இருக்கிறோம் என்ற விபரம் தெரியவரும். மேலும் இந்த மாதிரியான சம்பவங்கள் எதும் நடை பெறாது என பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார்.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 320

    0

    0