சினிமாவை மிஞ்சிய கடத்தல் சம்பவம்… வேகமாக சாலையில் சீறிப்பாய்ந்த கார்.. சாலையில் வாகனங்களை குறுக்கே போட்டு தெலங்கானா கும்பலை மடக்கி பிடித்த போலீஸ்..!!

Author: Babu Lakshmanan
15 November 2022, 4:33 pm

காஞ்சிபுரம் அருகே பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்ப வந்த வாலிபர் தெலுங்கானா நபர்களால் கடத்தல் சம்பவம் அரங்கேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் அய்யம்பேட்டை ஊராட்சியை சேந்தவர் ஜெய்கணேஷ். இன்று காலை தனது 3 பெண் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அய்யம்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே பள்ளிக்கு செல்லும் வாகனத்தில் தனது மகள்களை அனுப்ப வந்த ஜெய் கணேஷை காரில் வந்த மர்ம கும்பல் கடத்தியது.

இந்த தகவல் காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்டதால் அனைத்து பகுதிகளிலும் காவல் துறையினர் அலர்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் சிக்னல் அருகே தெலுங்கானா ரெஜிஸ்ட்ரேஷன் கொண்ட கிரே கலர் கார் வேகமாக வந்தது. அதை அந்த பகுதியில் இருந்த போக்குவரத்து காவலர் தனசேகர் என்பவர் மடக்கி பிடிக்க முயலும்போது அவரை மீறி கார் செல்ல முற்பட்டது.

அதை கண்ட அந்த பகுதியில் இருந்த பொதுமக்களும், ஆட்டோ ஓட்டுநர்களும் சாலையின் குறுக்கே தங்கள் வாகனத்தை நிறுத்தி அந்த கார் மேற்கொண்டு செல்லாதவாறு தடுத்து நிறுத்தினர்.

அந்த காரில் தான் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த மகேஷ், கிரிபாபு, சந்திரசேகர், சந்திரபாபு உள்ளிட்ட நான்கு பேர் ஜெய் கணேஷை கடத்தியது தெரிய வந்தது. அப்பொழுது அந்த வழியாக வந்த தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் துளசி அவர்கள், தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் மற்றும் ஜெய்கணேஷ் ஆகியோர்களை பிடித்து சிவகாஞ்சி காவல் நிலையம் கொண்டு சென்றனர்.

அங்கு வைத்து துணைக் காவல் கண்காணிப்பாளர் ஜூலியஸ் சீசர் தலைமையில் ஆய்வாளர் விநாயகம் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்களுடன் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒரு நண்பரும் சேர்ந்து ஜெய் கணேஷை கடத்தியது தெரிய வந்தது.

விசாரணையில் ஜெய் கணேஷ் தெலுங்கானாவில் வேலை செய்த போது, சந்திரபாபு என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சந்திரபாபு இடம் ஜெய் கணேஷ் 16 லட்சம் ரூபாய் பணம் கடனாக பெற்றிருந்தார். சந்திரபாபு தான் கொடுத்த பணத்தை கேட்ட பொழுதெல்லாம் பல இடங்களில் முதலீடு செய்துள்ளதாக ஜெய் கணேஷ் கூறியுள்ளார்.

ஒரு கட்டத்தில் இவர் ஏமாற்றுவது போல் நடந்து கொண்டதால், தெலுங்கானாவிலிருந்து காஞ்சிபுரம் வந்த நபர்கள் மூன்று நாட்களாக காஞ்சிபுரத்தில் தங்கி ஜெய்கணேசிடம் தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். அவர் பணத்தைக் கொடுக்க காலதாமதம் செய்து வந்ததால் இன்று காலையில் தங்களுடைய மகள்களை பள்ளிக்கு அனுப்ப ஐயம்பேட்டை பேருந்து நிலையம் அருகே நின்றிருந்த ஜெய்கணேசை மேற்கண்ட நபர்கள் காரில் கடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது.

இது தொடர்பான கண்காணிப்பு கேமரா புட்டேஜை காட்சிகள் அருகே உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் பதிவாகியுள்ளது. நமது செய்தியாளர்கள் கண்காணிப்பு கேமரா புட்டேஜ்யை ஆய்வாளர் ஜெயவேல் அவர்களிடம் கேட்ட போது, மேற்கண்ட காட்சிகளை வழங்கக் கூடாது என கூறியுள்ளார். இதனால் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் மேலாளர் மேற்கண்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை நமக்கு வழங்கவில்லை.

தற்போது தெலுங்கானாவை சேர்ந்த நபர்களும் கைது செய்யப்பட்டு வாலாஜாபாத் காவல் நிலையத்தில் வைத்து மேற்கொண்டு விசாரணை வருகின்றார்கள். தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த நபர்கள் அய்யம்பேட்டை பகுதியில் உள்ள கடத்த முயன்ற விஷயம் அய்யம்பேட்டை பகுதியில் மிகுந்த பரப்பரப்பை ஏற்படுத்தியது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 497

    0

    0