‘என் கள்ளக்காதலியோட நீ எப்படி இருக்கலாம்?’.. நண்பன் கொலை!
Author: Hariharasudhan28 December 2024, 12:13 pm
சென்னையில், தனது கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த நண்பனைக் கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை: சென்னை அடுத்த டி.பி.சத்தரம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (40). கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளனர். அதேபோல், சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த மீனாட்சி (37) என்ற பெண்ணுக்கும் திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், மோகன்ராஜுக்கும், மீனாட்சிக்கும் இடையே திருமணத்துக்கு மீறிய உறவு ஏற்பட்டு உள்ளது. எனவே, இருவரும், அமைந்தகரை முத்துமாரியம்மன் கோயில் தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில், கடந்த ஒரு வாரமாக வசித்து வந்து உள்ளனர். இந்த நிலையில், மோகன்ராஜ் தனது நெருங்கிய நண்பரான டி.பி.சத்திரம் பகுதியைச் சேர்ந்த ராமசந்திரன் (40) என்பவரை, நேற்று முன்தினம் இரவு மது அருந்த வீட்டிற்கு அழைத்து வந்து உள்ள்ளார்.
இதனையடுத்து, மோகன்ராஜ், அவரது கள்ளக்காதலி மீனாட்சி மற்றும் ராமசந்தின் ஆகிய மூவரும் அமர்ந்து ஒன்றாக மது அருந்தி உள்ளனர். ஒரு கட்டத்தில் 3 பேருக்கும் போதை தலைக்கேறியதால், மூவரும் அங்கேயே தூங்கி உள்ளனர். பின்னர், நள்ளிரவில் மோகன்ராஜ் கண்விழித்து பார்த்து உள்ளார்.
அப்போது, மீனாட்சியும், ராமசந்திரனும் உல்லாசமாக இருந்து உள்ளர். இதனைக் கண்டு ஆத்திரம் அடைந்த மோகன்ராஜ், ராமசந்திரனை சரமாரியாகத் தாக்கி உள்ளார். இதனால் படுகாயம் அடைந்த ராமசந்திரன், ரத்த வெள்ளத்தில் அலறி கூச்சலிட்டு உள்ளார்.
இதையும் படிங்க: ‘அந்த’ ஒரு மணி நேரத்தில் நடந்தது என்ன? புதுக்கோட்டை நர்சிங் மாணவி மர்ம மரணம்!
பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அக்கம் பக்கத்தினர், அமைந்தகரை போலீசாருக்கு தகவல் அளித்து உள்ளனர். இந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ராமசந்திரனை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ராமசந்திரன் நேற்று பிற்பகலில் உயிரிழந்து உள்ளார். இதனையடுத்து, இதுகுறித்து அமைந்தகரை போலீசார் வழக்குப் பதிவு செய்து, மோகன்ராஜைக் கைது செய்தனர்.