படுகொலையில் முடிந்த டிவி விவாத நிகழ்ச்சி… பட்டப்பகலில் கூலித் தொழிலாளி வெட்டிக்கொலை ; தாய், மகன் எஸ்கேப்..!!!

Author: Babu Lakshmanan
3 April 2024, 4:40 pm

தனியார் தொலைக்காட்சி நடத்திய ‘வாழ்ந்து காட்டுவோம்’ நிகழ்ச்சியில் ஏற்பட்ட சண்டையில் மகனே தந்தையை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, தாண்டவராயபுரம், மாதா கோவில் தெருவில் வசிப்பவர் லட்சுமணன் மகன் கருப்பண்ணன் (67). இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். இவருக்கு, மனைவி மாரியம்மாள் (65), மகன் ராஜா (40), மகள் சந்திரா (35) உள்ளனர். மகன் ராஜாவுக்கு இரண்டு மனைவிகள் உள்ள நிலையில், முதல் மனைவியை பிரிந்து இரண்டாது மனைவியுடன் இருந்து வருகிறார். மகள் சந்திராவுக்கு திருமணமாகி அவரது கணவர் வீட்டில் வசித்து வருகிறார்.

மேலும் படிக்க: குடியரசு தலைவருக்கே இந்த நிலைமையா..? இதுதான் பாஜக ஆட்சி ; கோபத்தில் கொந்தளித்த கனிமொழி..!!!

மேலும், ராஜா கட்டிட கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், ராஜாவின் தந்தை கருப்பண்ணன், அவரது பெயரில், தாண்டவராயபுரம் மற்றும் வெண்ணந்தூர் பகுதியில் உள்ள சொத்தை மகன் ராஜாவின் முதல் மனைவி மகன் சங்கர் என்பவரின் பெயரில் சொத்தை எழுதி வைக்க முடிவு செய்துள்ளார்.

இதனால், தந்தை கருப்பண்ணனுக்கும், மகன் ராஜாவுக்கும், கடந்த சில ஆண்டுகளாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும், கருப்பண்ணன் தனது மனைவி மாரியம்மாளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது தாய் வீட்டில் இருந்து வருகிறார். இந்த நிலையில், ராஜா தனது பெயரில் சொத்தை எழுதி வைக்குமாறு ராஜாவும், அவரது தாய் மாரியம்மாளும் கருப்பண்ணனிடம் தகராறில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: ‘யாருமே நம்ப மாட்டீறாங்க’…. விவாகரத்து முடிவில் மனைவி ; வீடியோ வெளியிட்டு அரசுப் பேருந்து ஓட்டுநர் தற்கொலை…!!!

இரு வாரங்களுக்கு முன் தனியார் தொலைக்காட்சியில் வாழ்ந்து காட்டுவோம் என்ற விவாத நிகழ்ச்சியில் கருப்பண்ணன், அவரது மனைவி மாரியம்மாள், மகன் ராஜா ஆகியோர் பங்கேற்றனர். அப்போது அந்த நிகழ்ச்சியில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்தது.

இந்நிலையில், இன்று வீட்டில் தனியாக இருந்த கருப்பண்ணனை, அவரது மனைவி மாரியம்மாள், மகன் ராஜா ஆகிய இருவரும் அரிவாளில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினர். ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த கருப்பண்ணன் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்து வந்த ஆத்தூர் நகர போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்த பின்னர், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய மனைவி மாரியம்மாள், மகன் ராஜாவையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சொத்து தகராறில் தந்தையை பட்டப் பகலில் கட்டிய மனைவியும், மகனும் வெட்டி படுகொலை செய்த சம்பவம் ஆத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 405

    0

    0