சாலையில் நடந்து வந்த மனைவிக்கு கத்திகுத்து.. கணவன் வெறிச்செயல்.. ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து உயிரிழப்பு : அதிர்ச்சி சிசிடிவி காட்சி

Author: Babu Lakshmanan
24 January 2023, 11:20 am

வேலூர் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன், மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சிசிடிவி காட்சிகளை வைத்து கணவனை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம், மேல்பட்டி அடுத்த அழிஞ்சிகுப்பம் கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரியான ஜெய்ஷங்கர் (43) என்பவருக்கும், புனிதா (32) என்பவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகளாகிறது. இவர்களுக்கு நிவேதா(9) என்ற பெண்ணும் நீதிஷ் (7) என்ற ஆண் மகன் உள்ளார்கள் புனிதா ஆம்பூரில் உள்ள தனியார் தோல் தொழில் சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார்,

குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி வாய் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையான கட்டிட மேஸ்திரி ஜெய்சங்கர், மது அருந்திவிட்டு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அடிக்கடி சண்டையிடுவது வழக்கமாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு மனைவி ஆம்பூரில் உள்ள தனியார் காலனி தொழிற்சாலையில் வேலையை முடித்துவிட்டு ஊருக்கு பேருந்தில் இறங்கி வந்து கொண்டிருந்தபோது, கணவன் அவர் வருவதைக் கண்டு அருகே சென்று மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த புனிதாவை மீட்டு அருகே இருந்தவர்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இதனிடையே சம்பவம் நடந்த இடத்துக்கு அருகே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஜெய்சங்கரை மேல்பட்டி போலீசார் கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவியை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 772

    0

    0