மனைவியை கொன்று விட்டு கணவன் செய்த செயல்.. காப்பான்ற முயன்ற உறவினருக்கும் அரிவாள் வெட்டு… சைக்கோ கொலையாளி கைது..!!

Author: Babu Lakshmanan
5 January 2024, 10:30 am

தூத்துக்குடி ; கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலத்தில் மனைவியை வெட்டி கொலை செய்து விட்டு வீட்டுக்குள் பதுங்கி இருந்த கணவனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் இன்னாசி முத்து. வயது 63. இவரது மனைவி மருதம்மாள். வயது 53. இவர்களது மகள் விமலா சென்னையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இன்னாசிமுத்துவுக்கும், மருதம்மாளுக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் தகராறு ஏற்படவே ஆத்திரமடைந்த இன்னாசிமுத்து, தனது மனைவி மருதம்மாளை வீட்டுக்குள் வைத்து கை, கால், முகம், பெண் உறுப்பு என உடலின் பல்வேறு பாகங்களில் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு இரவு முழுவதும் அங்கேயே பதுங்கி இருந்துள்ளார்.

இந்நிலையில் காலையில் வெகு நேரமாகியும் வீட்டு கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்த போது, அங்கு ரத்த வெள்ளத்தில் மருதம்மாள் உயிரிழந்து கிடப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, உறவினர் சின்ன மருது என்பவர் வீட்டின் வாசல் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, உள்ளே பதுங்கி இருந்த இன்னாசி முத்து உறவினர் சின்னமருதுவையும் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் நிலைகுலைந்த சின்ன மருது அங்கேயே மயங்கி விழுந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்த சின்ன மருதுவை மீட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். கொலை செய்யப்பட்ட மருதம்மாளின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சைக்கோ கொலையாளி இன்னாசிமுத்துவை தேடி வந்தனர்.

இந்நிலையில் கொலையாளி இன்னாசி முத்து போலீசுக்கு பயந்து பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து அங்குள்ள காட்டுப்பகுதியில் மயங்கி விழுந்து கிடந்தார். இதையடுத்து, அவரை மீட்ட போலீசார் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

மனைவி மருதம்மாளை வெட்டி கொலை செய்துவிட்டு கணவர் இன்னாசிமுத்து இரவு முழுவதும் வீட்டுக்குள் பதுங்கி இருந்த சம்பவமும், அடுத்த நாள் காலையில் உறவினர் சின்னமருதுவை வெட்டிவிட்டு தப்பி ஓடி தற்கொலைக்கு முயன்ற சம்பவமும் பாண்டவர்மங்கலம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 1317

    0

    0