தங்கையுடன் தகாத உறவு.. எரிந்த நிலையில் கிடந்த சடலம்.. அருப்புக்கோட்டை அருகே அதிர்ச்சி!
Author: Hariharasudhan12 December 2024, 12:25 pm
தங்கையுடன் தகாத உறவில் இருந்த நபரைத் தட்டிக் கேட்டதால் அண்ணன் உறவு முறை நபர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மங்கையன். இவர் கூலித் தொழில் செய்து வந்தார். குடும்பத் தகராறு காரணமாக மங்கையின் மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். இவருடன், இவரது மகள் உள்ளார்.
எனவே, அவரது மகளைக் கவனித்துக் கொண்டு மங்கையன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில், மங்கையனின் தங்கை உறவுக்கார பெண் ஒருவருடன் அதே பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் திருமணத்தை மீறிய உறவில் இருந்து உள்ளார். இதனை அறிந்த மங்கையன், முத்துக்குமாரை பலமுறைக் கண்டித்து உள்ளார்.
இதனால், மங்கையனுக்கும், முத்துக்குமாருக்கும் இடையே தகராறு இருந்து வந்து உள்ளது. இந்த நிலையில், ஊரில் ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் எரிந்த நிலையில் மனித சடலம் ஒன்று கிடந்து உள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள், இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்து உள்ளனர்.
இந்தத் தகவலின் பேரில் வந்த போலீசார், அருகில் சென்று பார்த்தபோது, கை மட்டும் எரியாமல் இருந்து உள்ளது. இதனை வைத்து விசாரணை மேற்கொண்டதில், அது மங்கையனின் சடலம் என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. பின்னர், இது தொடர்பாக முத்துக்குமாரை பிடித்து போலீசார் விசாரித்து உள்ளனர்.
இதையும் படிங்க: ‘ அதற்காக’ அழைத்த பெண்.. மறுத்த ஆணின் அந்தரங்க உறுப்பை வெட்டிய கொடூரம்!
அப்போது, தன்னுடைய தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் மங்கையனை கொன்று எரித்ததாக முத்துக்குமார் ஒப்புக் கொண்டு உள்ளார். இதனையடுத்து, முத்துக்குமாரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.