தென்காசியில் 45 வயது நபர் ஒருவர் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்காசி: தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கருத்த பிள்ளையூர் அந்தோணியார் தெருவைச் சேர்ந்தவர் அருள். இவரது மகன் சொக்கன் என்ற இருதயராஜ் (45). இவர் ஆதரியானூர் பகுதியில் உள்ள அச்சங்குளம் – கள்ளத்திகுளம் பகுதியில் மீன் பாசி குத்தகைக்கு எடுத்து உள்ளார்.
மேலும், இவர் இரவு நேரத்தில் குளத்துக் கரையில் காவல் இருப்பதை வழக்கமாகக் கொண்டு உள்ளார். அந்த வகையில், நேற்று இரவும் சொக்கன் காவலில் இருந்துள்ளார். அப்போது திடீரென அங்கு வந்த மர்ம நபர்கள், சொக்கனை அரிவாளால் தாக்கியது மட்டுமல்லாமல், அவரது தலையைத் துண்டித்து கொலை செய்துள்ளனர்.
பின்னர், இது குறித்து தகவல் அறிந்த ஆழ்வார்குறிச்சி போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று, சொக்கனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர்.
தொடர்ந்து விசாரணை நடத்திய அவர்கள், பாதுகாப்பு பணிக்கு சில காவலர்களை நியமித்துவிட்டுச் சென்றுள்ளனர். மேலும், போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சொத்துப் பிரச்னை காரணமாக இந்தக் கொலை சம்பவம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: மேஸ்திரியுடன் தகாத உறவு.. கணவனை நூதனமாக கொன்ற மனைவி!
இதனைத் தொடர்ந்து, கொலை செய்த மர்ம நபர்களை செல்போன் எண்களைக் கொண்டு போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். முன்னதாக, அருகில் உள்ள நெல்லை மாவட்டத்தில் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராக வந்த மாயாண்டி மற்றும் சட்டக்கல்லூரி மாணவர் மாயாண்டி ஆகிய இருவரும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.