ஆட்டோவில் ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக்காதலி… கோபத்தில் லிவ்-இன் காதலன் செய்த செயல் ; சென்னையில் பயங்கரம்!!

Author: Babu Lakshmanan
20 April 2023, 4:08 pm

சென்னையில் தகாத உறவில் பழக்கம் ஏற்பட்ட பெண்ணை கள்ளக்காதலனே பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி அருகே கொள்ளுமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுதா. கடந்த 2014ம் ஆண்டு சுரேஷ் என்பவருடன் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை பிரிந்து தனியே வசித்து வந்தார்.

தனியார் கல்லூரி உணவகத்தில் சுதா பணிபுரிந்து வந்துள்ளார். அங்கு உடன் பணியாற்றிய செளந்திரபாண்டியன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியுள்ளது. இதையடுத்து, இருவரும் தனியாக வீடு எடுத்து ஒரு வருடமாக லிவ் இன் முறையில் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், சுதா மற்றும் சௌந்திரபாண்டியனுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டதால், செளந்திரபாண்டியனை விட்டு பிரிந்த சுதா, தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். சுதாவை காணாமல் தவித்து வந்த சௌந்திரபாண்டியன், ஆட்டோவில் சென்று தன்னுடன் வருமாறு சுதாவை அழைத்துள்ளார்.

அவர் மறுக்கவே, சுதாவை தன்னுடன் வருமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். தொடர்ந்து மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த சௌந்திரபாண்டியன், சுதா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர், 60 சதவீத தீக்காயங்களுடன் சுதாவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார் செளந்திர பாண்டியனை தேடி வருகின்றனர்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 427

    0

    0