மனைவியிடம் தப்பு தப்பாக சொன்ன கடை ஓனர்… கணவனுக்கு எழுந்த ஆத்திரம் ; வீடுதேடி சென்று செய்த காரியம்..!!

Author: Babu Lakshmanan
20 April 2023, 2:17 pm

கோவை ; கோவை செல்வபுரம் பகுதியில் முத்துராஜ் என்பவரது இருசக்கர வாகனத்தை தீவைத்து எரித்து விட்டு தப்பி ஓடிய நாசர் என்பவரை செல்வபுரம் போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை மைக்கல் பகுதியைச் சேர்ந்தவர் நாசர். இவர் மீது இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு உட்பட பல வழக்குகள் உள்ளன. நாசரின் இரண்டாவது மனைவி சமீரா, கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள மகேஸ்வரி என்பவரது சிப்ஸ் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். நாசர் முதல் மனைவி வீட்டிலேயே இருந்து விடுவார், உனது வீட்டிற்கு வர மாட்டார் என கடை உரிமையாளர் மகேஸ்வரி, சமீராவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் சமீரா கடந்த ஒரு வாரமாக நாசரிடம் சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நாசர் மகேஸ்வரியை போனில் அழைத்து திட்டியுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை மகேஸ்வரியின் வீட்டிற்கு சென்ற நாசரின் , மகேஸ்வரியின் மகன்
முத்துராஜின் இருசக்கர வாகனத்தை தீவைத்து எரித்து விட்டு தப்பி ஓடினார். வாகனம் தீப்பிடித்து எரிவதை பார்த்த மகேஸ்வரி உடனடியாக தீயை அணைக்க முயற்சி மேற்கொண்டார். ஆனால் தீயில் முழுமையாக இரு சக்கரவாகனம் எரிந்து நாசமானது.

இதுகுறித்து உடனடியாக செல்வபுரம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமுறைவாகியுள்ள நாசரை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தன்னை பற்றி மனைவியிடம் தவறாக சொன்னார் என்பதற்காக இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 310

    0

    0