பிரியாணிக்கு ஆசைப்பட்ட 75 வயது மூதாட்டி.. 30 வயது நபரால் பாலியல் தொல்லை.. மதுரையில் அதிர்ச்சி!
Author: Hariharasudhan21 February 2025, 12:25 pm
மதுரையில், பிரியாணிக்கு ஆசைப்பட்டுச் சென்ற 75 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 30 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 75 வயது மூதாட்டி. இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணமான நிலையில், இருவரும் தங்களின் குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மூதாட்டி அருகில் உள்ள ஒரு கடைக்குச் சென்றுள்ளார். அப்போது கடையின் அருகே, அதே பகுதியைச் சேர்ந்த 30 வயது நபர் நின்று கொண்டிருந்துள்ளார். பின்னர், தனது வீட்டில் பிரியாணி வாங்கி வைத்து உள்ளேன், சாப்பிட வருகிறீர்களா? என மூதாட்டியிடம் அந்த நபர் கேட்டுள்ளார்.

இதனையடுத்து மூதாட்டி தங்கப்பனின் வீட்டிற்க்குச் சென்று பிரியாணி சாப்பிட்டுள்ளார். இவ்வாறு மூதாட்டி சாப்பிடும் வரை, தங்கப்பன் அங்கேயே இருந்த நிலையில், சாப்பிட்டு முடித்த பிறகு மூதாட்டி வெளியே செல்ல முயன்றுள்ளார். ஆனால், அவரை வெளியேச் செல்லவிடாமல் தங்கப்பன் தடுத்துள்ளார்.
இதையும் படிங்க: பிரபுதேவா கான்செர்ட்டில் பாகுபாடு.. வேதனையுடன் விலகிய பிரபல நடிகை!
தொடர்ந்து, மூதாட்டியை மிரட்டி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ஆனால், எப்படியோ அங்கிருந்து தப்பி ஓடிய மூதாட்டி, தனது மகன்களுக்கு போன் செய்து நடந்தவற்றைக் கூறியுள்ளார். இதன்படி, ஊருக்கு வந்த மூதாட்டியின் மகன்கள், இது குறித்து சிந்துபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்ட பிறகு அந்த நபரைக் கைது செய்துள்ளனர்.