போக்சோவில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த இளைஞர்… நள்ளிரவில் வீட்டில் நடந்த சம்பவம் ; பதறிய குடும்பத்தினர்..!!

Author: Babu Lakshmanan
2 December 2023, 4:47 pm

பொன்னமராவதியில் போக்சோவில் சிறைக்கு சென்று ஜாமீனில் வெளியே வந்தவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே நரங்கியம்பட்டியை சேர்ந்தவர் பிரபு (28). இவர் போக்சோ சட்டத்தின் கீழ் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து. கடந்த 30ஆம்தேதி ஜாமினில் வெளியே வந்த அவர். நேற்று திருமயம் மகளிர் காவல் நிலையத்தில் கண்டிஷன் பெயர் போட்டு வந்துள்ளார்.

ஜாமீனில் வெளியே வந்ததில் இருந்தே அவர் சோகமாக காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காவல்நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு திரும்பிவிட்டு வீட்டில் தூங்கியுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்காததால், சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை திறந்து பார்த்த பொழுது, அவர் தூக்கில் பிணமாக தொங்கி உள்ளார்.

உடனடியாக பொன்னமராவதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே பிரேதத்தை அரசு பாப்பாய் ஆட்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

போக்சோவில் சிறைக்குச் சென்று ஜாமினில் வெளியே வந்தவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொன்னமராவதி பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 405

    0

    0