கள்ளத்தனமாக மது விற்க வேண்டும் என போலீசார் வற்புறுத்தியதாலே தான் தற்கொலை செய்து கொண்டதாக சிக்கிய கடிதத்தால் ராஜபாளையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள நக்கனேரி பகுதியைச் சேர்ந்தவர் செல்வக்குமார் (40). விபத்தில் கைகளை இழந்ததால், இவர் 60 சதவீத மாற்றுத்திறனாளியாக இருந்தார். மேலும், இவர் டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கி வந்து, சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், இதற்காக காவல்துறையினருக்கும் அவ்வப்போது குறிப்பிட்ட தொகையை லஞ்சமாக கொடுத்து வந்ததாகவும் தெரிகிறது. இருப்பினும், மாத இலக்குக்காக கள்ளத்தனமாக மது விற்பனை வழக்கின் பேரில், செல்வக்குமாரை அடிக்கடி போலீசார் கைது செய்துள்ளனர். இதனை அறிந்த ஊர் மக்கள், செல்வக்குமார் இனி மது விற்பனையில் ஈடுபடக் கூடாது என கட்டுப்பாடு விதித்ததாகவும் கூறப்படுகிறது.
எனவே, அவர் கள்ளத்தனமாக மது விற்பனை செய்யாமல் வேறு ஒரு வேலைக்குச் சென்று வந்துள்ளார். இந்த நிலையில், சேத்தூர் ஊரக காவல் நிலைய தலைமைக் காவலரான செல்வின், செல்வக்குமாரை கள்ளத்தனமாக மது விற்பனை செய்யச் சொல்லி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
ஆனால், அதற்கு செல்வக்குமார் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த டிசம்பர் 22ஆம் தேதி, தான் அருந்துவதற்காக செல்வக்குமார் மதுபாட்டில்கள் வாங்கிக் கொண்டு தனது ஸ்கூட்டரில் ஊர் திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டருகே செல்வக்குமாரை தடுத்து நிறுத்திய காவலர் செல்வின், அவரைத் தாக்கியதாக கூறப்படுகிறது.
அப்போது, இதனை வீடியோ எடுக்க முயன்ற செல்வக்குமாரின் மனைவியையும் தாக்கியதோடு, பாலியல் ரீதியில் தவறாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று செல்வக்குமாரின் மனைவி வேலைக்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த செல்வக்குமார், தற்கொலை செய்யும் முடிவெடுத்து, தன் சாவுக்குக் காரணம் காவலர் செல்வின் தான் எனக் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
இதையும் படிங்க: எங்க ஓடவா பார்க்க.. டிரோன் மூலம் விரட்டிய கிராம மக்கள்.. செங்கல்பட்டில் மிரட்டிய சம்பவம்!
பின்னர், இது குறித்த தகவல் அறிந்த போலீசார் விசாரணைக்கு வந்தபோது, அவர்களைத் தடுத்து நிறுத்திய உறவினர்கள், திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, குற்றம் சாட்டப்பட்ட காவலர் செல்வின் மீது நடவடிக்கை எடுக்காமல், செல்வக்குமாரின் உடலை எடுத்துச் செல்ல விடமாட்டோம் எனக் கூறி தடுத்துள்ளனர்.
அப்போது, சமரசம் பேசிய சரக காவல் துணை கண்காணிப்பாளர் ப்ரீத்தி, உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்ததையடுத்து, செல்வக்குமாரின் உடல் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் ராஜபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போதெல்லாம் ஒரு படம் ஹிட் ஆனாலே, நடிகர் நடிகைகள் கொடுக்கும் பில்டப்புக்கு எல்லையே இல்லை. நடிகைகள் தயாரிப்பாளர்களிடம் கறார் காட்டுவதும்,…
சென்னையில், இன்று (மார்ச் 13) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 55 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 120…
ரவிமோகன் இயக்குநர் அவதாரம் எடுக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், அப்படத்தில் யோகி பாபு மெயின் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
தமிழகத்திலும் மதுபான ஊழலில் ரூ.1,000 கோடி கருப்பு பணம் திமுகவுக்கு கைமாறியுள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.…
60 வயது நடிகருடன் நான் இருந்தனா-கஸ்தூரி அதிர்ச்சி தகவல் தமிழ்,தெலுங்கு,மலையாள என பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்…
நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அதிரடி என்ட்ரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிரபல தெலுங்கு…
This website uses cookies.