திருமணம் செய்ய மறுத்த கள்ளக்காதலி.. வீட்டின் முன்பு தூக்கில் தொங்கிய கள்ளக்காதலன் ; போலீசார் விசாரணை!!
Author: Babu Lakshmanan14 April 2023, 2:52 pm
திருமணம் செய்ய மறுத்த கள்ளக்காதலியின் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் புலிவலம் அருகே உள்ள திரு.வி.க நகரைச் சேர்ந்த சையது உசேன் என்பவரின் மனைவி ரெஜினா பேகம் (வயது 34). இவர் கணவனை இழந்த நிலையில் தனது குழந்தைகளுடன் இப்பகுதியில் வசித்து வருகிறார்.
சையது உசேன் இறந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில், சையது உசேனின் நண்பர் திருவாரூர் பகுதியை சேர்ந்த செல்வகணபதி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவருக்கும் திருமணமாகி மனைவி ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், நண்பரின் குடும்பம் என்ற அடிப்படையில் ரெஜினா பேகத்தின் குடும்பத்துக்கு அனைத்து உதவிகளையும் செல்வகணபதி செய்து வந்துள்ளார். அந்த அடிப்படையில் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் ரெஜினா பேகத்தின் உறவினர்கள் மற்றும் அவர் சம்பந்தப்பட்ட ஜமாத்தாரிடம் தான் ரெஜினா பேகத்தை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார். இதற்கு ஜமாத்தாரும் உறவினர்களும் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, ரெஜினா பேகம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு குழந்தைகளுடன் காரைக்காலில் உள்ள சகோதரி வீட்டிற்கு சென்று வசித்து வருகிறார். மேலு,ம் செல்வகணபதியின் செல்போன் அழைப்புகளை அவர் தொடர்ந்து எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த செல்வ கணபதி நேற்று இரவு திரு.வி.க நகரில் உள்ள ரெஜினா பேகத்தின் வீட்டின் போர்டிகோவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் நிகழ்விடத்துக்கு சென்று செல்வகணபதி உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.