பேருந்தில் பயணியிடம் ரூ.10,000 அபேஸ் செய்ய முயற்சி ; ஸ்மார்ட்டான பிக் பாக்கெட்டுக்கு தர்ம அடி கொடுத்த சக பயணிகள்!!

Author: Babu Lakshmanan
20 December 2022, 9:56 am

கரூர் ; குளித்தலையில் பேருந்தில் பயணித்த நபரிடம் ரூ.10000 திருடியதாக நபரை துரத்தி நடத்துனர் மற்றும் பயணிகள் தர்ம அடி கொடுத்தனர்.

திருப்பூரிலிருந்து வேதாரண்யம் நோக்கி கரூர், குளித்தலை பேருந்து நிலையம் வழியாக வந்த அரசு பேருந்தில் பயணி ஒருவரிடம் இருந்த ரூ.10,000 பணத்தை திருடி தனது பையில் எடுத்து வைத்ததாக அருகில் இருந்த நடத்துநர் மற்றும் சக பயணிகள் பணத்தை எடுத்த நபரிடம் மீட்டு கொடுத்துள்ளனர்.

உடனடியாக அந்த நபர் பேருந்தை விட்டு கீழே இறங்கி வேகமாக நடக்க ஆரம்பித்துள்ளார். பின்தொடர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மற்றும் சக பயணிகள் துரத்தி சென்று சரமாரியாக தர்ம அடி கொடுத்ததில் கீழே விழுந்துள்ளார்.

அப்போது காந்திசிலை அருகே இருந்தவர்கள் அந்த நபரை தாக்கியவர்களை தடுத்து நிறுத்தி அந்த நபரை மீட்டனர். அப்போது, செய்தியாளர்கள் வீடியோ பதிவு செய்வதை பார்த்த நடத்துநர், ஏன் வீடியோ எடுக்கிறீர்கள்..? என கேட்டவாறே உடனடியாக சக பயணிகளை அழைத்துகொண்டு பேருந்தில் ஏறி சென்றனர்.

அப்போது வந்த குளித்தலை போலீசார் பணத்தை திருடியதாக கூறப்படும் நபரை விசாரித்தபோது, அவர் தென்னக ரயில்வே துறையில் வேலைபார்த்து ஓய்வு பெற்றதாகவும், நேற்று கோயம்புத்துர் பகுதியிலிருந்து குளித்தலையில் வைத்தியரை பார்க்க வந்ததாகவும், திருச்சி செல்வதற்காக பஸ்ஸில் ஏறியதாக தெரிவித்தும் உள்ளார்.

மேலும், தனக்கு விபத்து ஒன்றில் ஒரு கால் முறிந்து சர்ஜரி செய்தாகவும், அதனால் வேகமாக நடக்க முடியாது நான் எப்படி திருடுவேன் என்றும், அருகில் இருந்த 2 பேர் பணத்தை எடுத்து என்னருகே போட்டுவிட்டு ஓடிவிட்டதாப முன்னுக்குப் பின் முரணாக போலீசாரிடம் கூறியுள்ளார். இருப்பினும், போலீசார் அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 577

    0

    0