உருவாகிறது மெகா கூட்டணி… பூரிப்பில் அதிமுக : இபிஎஸ் உடன் பாமக எம்எல்ஏ சந்திப்பு…!!!

Author: Udayachandran RadhaKrishnan
17 March 2024, 6:13 pm

உருவாகிறது மெகா கூட்டணி… பூரிப்பில் அதிமுக : இபிஎஸ் உடன் பாமக எம்எல்ஏ சந்திப்பு…!!!

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் பாமக எம்எல்ஏ அருள் சந்தித்துள்ளார்.

மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக- பாமக இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பாமக கேட்கும் தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

அன்புமணி மற்றும் ஜி.கே.மணி ஆகியோர் இன்று காலை தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 215

    0

    0