மகளிர் உரிமைத்தொகை: பரவிய குறுஞ்செய்தி: குவிந்த பெண்களால் பரபரப்பான மாவட்ட ஆட்சியர் அலுவலகம்…!!

Author: Sudha
17 August 2024, 2:21 pm

மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான மனுக்களை உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் கொடுக்க வேண்டும் எனவும் இந்த முகாம் இன்று திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே நடைபெறும் எனவும் தமிழகம் முழுவதும் what’s app ல் குறுஞ்செய்தி ஒன்று பரவி உள்ளது.

இதனை நம்பி அந்தந்த ஊர்களில் உள்ள பெண்கள் பலரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு வருகின்றனர்.
அதேபோல் கோவை மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள் இந்த குறுஞ்செய்தியை நம்பி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தொடர்ந்து வருகை புரிந்து வருகின்றனர்.

ஆனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதுபோன்ற எந்த ஒரு சிறப்பு முகாமும் நடைபெறவில்லை என்பதால் ஏமாற்றமடைந்த பெண்கள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் இது சம்பந்தமாக அதிகாரிகளை பார்க்க வேண்டும் என்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் முறையிட்ட நிலையில் சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் அதிகாரிகள் யாரும் இருக்க மாட்டார்கள் என காவல்துறையினர் எடுத்துக் கூறியும் நடவடிக்கை இல்லாமல் தாங்கள் இங்கிருந்து செல்ல மாட்டோம் என்று கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் காத்திருப்பதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

மேலும் இந்த குறுஞ்செய்தியை அனுப்பியது யார் என்று கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெண்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 188

    0

    0