சீன நிறுவனம் தயாரித்த மொபைலை OPPO போன் என போலி பில் தயாரித்து விற்பனை : பொதுமக்கள் பிடியில் சிக்கிய வடமாநில இளைஞர்!

Author: Udayachandran RadhaKrishnan
24 ஜனவரி 2024, 6:54 மணி
mobile phne
Quick Share

சீன நிறுவனம் தயாரித்த மொபைலை OPPO போன் என போலி பில் தயாரித்து விற்பனை : பொதுமக்கள் பிடியில் சிக்கிய வடமாநில இளைஞர்!

திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள செல்போன் கடையில் ஹரிகிருஷ்ணன் என்பவர் செல்போன் வாங்க சென்றுள்ளார் அப்போது கடையின் வெளியே இருந்த வடமாநில இளைஞர் புது செல்போன் வாங்கி தற்போது அவசர தேவைக்காக விற்பனை செய்வதாக தெரிவித்து பில் காட்டியுள்ளார்.

அதனை பெற்றுக் கொண்ட ஹரிகிருஷ்ணன் 8500 கொடுத்து செல்போனை வாங்கி உள்ளார். சில நிமிடங்களில் செல்போன் போலியான சைனா போன் என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மீண்டும் அங்கு சென்ற ஹரிகிருஷ்ணன் அங்கிருந்த வடமாநில இளைஞரை பிடித்து கேட்ட போது தப்பி ஓட முயன்றுள்ளார். இதனையடுத்து ஹரிகிருஷ்ணன் சப்தம் எழுப்பியதை தொடர்ந்து அங்கிருந்து பொதுமக்கள் வடமாநில இளைஞரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

பின்னர் அங்கு வந்த திருப்பூர் தெற்கு போலீசார் வடமாநில இளைஞரையும் ஹயிகிருஷ்ணனையும் காவல் நிலையம் அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  • KASTHURI மேடை முதல் மன்னிப்பு வரை.. கஸ்தூரி விவகாரத்தில் நடந்தது என்ன?
  • Views: - 278

    0

    0