2 மகன்களுடன் கிணற்றில் குதித்த தாய்… 3 மணி நேரமாக கயிற்றில் சிக்கி போராடிய 6 வயது சிறுவன்!

Author: Udayachandran RadhaKrishnan
21 September 2024, 6:05 pm

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இனுங்கூர் ஊராட்சி கீழ சுக்காம்பட்டியை சேர்ந்தவர் லாரி டிரைவர் அருண் 30. இவருக்கு லட்சுமி என்பவருடன் திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ளனர்.

முதல் மகன் தர்ஷன் (6) இரண்டாவது மகன் நிஷாந்த் 4. அருண் தனது குடும்பத்தினருடன் தற்போது மேலசுக்காம்பட்டியில் உள்ள சுப்ரமணி என்பவர் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை தனது இரு மகன்களை தோட்டத்தில் உள்ள கிணற்றில் தள்ளிவிட்டு தானும் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதில் லெட்சுமி மற்றும் மற்றும் நிஷாந்த் நீரில் மூழ்கி பலியாகினர். தர்ஷன் மட்டும் கிணற்றின் மோட்டார் தொங்கவிட்ட கயிற்றினை பிடித்து தப்பியுள்ளார்.

3 மணி நேரமாக கயிற்றினை பிடித்தவாறு கூச்சலிட்டு வந்துள்ளார். அப்போது அருகில் வசிக்கும் நபர் எதேர்ச்சையாக கூச்சலிடும் சத்தம் கேட்டு கிணற்றில் வந்து பார்த்தபோது தர்ஷன் கயிற்றை பிடித்தவாறு இருந்ததை கண்டு அருகில் இருந்தவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

Update News 360 - Children

மேலும் இது குறித்து திருச்சி தீயணைப்புத் துறையினர் மற்றும் குளித்தலை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சிறு காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்ட தர்ஷன் அருகிலுள்ள இனுங்கூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும் படிக்க: குழந்தையை வைத்து ஆபத்தான முறையில் ரீல்ஸ்.. பதை பதைக்க வைத்த வீடியோ!

மேலும் கிணற்று நீரில் மூழ்கிய லட்சுமி மற்றும் நிஷாந்த் ஆகிய இருவரையும் இறந்த நிலையில் சடலமாக முசிறி தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

இருவரது உடல்களையும் கைப்பற்றிய குளித்தலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கணவன் மனைவியிடையே குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் குளித்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Good Bad Ugly Hit of Flop குட் பேட் அக்லி படம் ஹிட்டா? இல்லையா? இன்னும் எவ்வளவு கோடி வசூல் செய்யணும்?