அம்மனுக்கு தாலி கட்டிய இஸ்லாமியர்… வினோத திருவிழா : ஊர்வலமாக அழைத்து ஆச்சரியப்படுத்திய காட்சிகள் வைரல்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 August 2023, 7:59 pm

அம்மனுக்கு தாலி கட்டிய இஸ்லாமியர்… வினோத திருவிழா : ஊர்வலமா அழைத்து ஆச்சரியப்படுத்திய காட்சிகள் வைரல்!!

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள இருளப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீ காணியம்மன தேர் திருவிழா நடைபெற்றது.

இந்த திருவிழாவின் போது இசுலாமியர் ஒருவர் அம்மனுக்கு தாலிகட்டி திருக்கல்யாணம் செய்து மூன்றாம் நாள் பட்டி தொட்டியெல்லாம் ஒன்று திரண்டு அம்மனை அலங்கரித்து தேரில் ஏற்றினார்.

இருளப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் மற்றும் வெளியூர் மாவட்டத்தில் இருந்தும் இந்த திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுத்து தேர் மீது உப்பு, பொரி, மற்றும் நவ தானியங்களை வீசி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

https://vimeo.com/857536670?share=copy

தற்போது இசுலாமியர் ஒருவர் அம்மனுக்கு தாலி கட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைராலகி பல்வேறு நபர்களையிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • a temple built for samantha in andhra pradesh திடீரென சமந்தாவுக்கு உருவான கோவில்! பிறந்தநாளில் இப்படி ஒரு சம்பவமா?