அலுவலகத்தில் புகுந்து பாஜக பிரமுகரை சரமாரியாக வெட்டிய மர்மகும்பல் : கோவையில் பகீர் சம்பவம்.!!

Author: Udayachandran RadhaKrishnan
28 August 2024, 10:29 am

கோவை வடவள்ளி சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 28). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணி புரிந்து வருகிறார்.

பா.ஜ.க ஆர்.எஸ்.புரம் பகுதி இளைஞர் அணி செயலாளராக உள்ளார். அதே பகுதியில் பூ மார்க்கெட்டில் உள்ள தனது அலுவலகத்தில் அவர் இருந்த போது, ​​நான்கு பேர் கொண்ட கும்பல் அலுவலகத்திற்குள் புகுந்து அவரை ஆயுதங்களால் வெட்டியதாக காவல் துறை தெரிவித்து உள்ளனர்.

மேலும் இத்தாக்குதலில் அவர் கைகளில் இரண்டு மணிக்கட்டுகளிலும் வெட்டுக் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு சாய்பாபா காலனி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

காவல் துறை விசாரணையில் ஆர்.எஸ்.புரத்தில் மற்றொரு கும்பலுடன் முன்விரோதம் காரணமாக கடந்த செவ்வாய்கிழமை இரவு கும்பலால் தாக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 277

    0

    0