கோவை வடவள்ளி சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 28). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணி புரிந்து வருகிறார்.
பா.ஜ.க ஆர்.எஸ்.புரம் பகுதி இளைஞர் அணி செயலாளராக உள்ளார். அதே பகுதியில் பூ மார்க்கெட்டில் உள்ள தனது அலுவலகத்தில் அவர் இருந்த போது, நான்கு பேர் கொண்ட கும்பல் அலுவலகத்திற்குள் புகுந்து அவரை ஆயுதங்களால் வெட்டியதாக காவல் துறை தெரிவித்து உள்ளனர்.
மேலும் இத்தாக்குதலில் அவர் கைகளில் இரண்டு மணிக்கட்டுகளிலும் வெட்டுக் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு சாய்பாபா காலனி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
காவல் துறை விசாரணையில் ஆர்.எஸ்.புரத்தில் மற்றொரு கும்பலுடன் முன்விரோதம் காரணமாக கடந்த செவ்வாய்கிழமை இரவு கும்பலால் தாக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…
வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…
This website uses cookies.