உள்ளூர் TO வெளிநாடு.. “அட சூப்பரா இருக்கே” கண்களை கவரும் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி..!
Author: Vignesh5 ஆகஸ்ட் 2024, 11:17 காலை
கொடைக்கானலில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி நடைபெறுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானலில்
தி கொடைக்கானல் கென்னல் அசோசியேசன், தி மெட்ராஸ் கெனைன் கியம், தி சேலம் அக்மி கென்னல் கிளப் சார்பில் கொடைக்கானலில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி நேற்று தொடங்கியது.
இந்த கண்காட்சியில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மும்பை, மகாராஷ்டிரா, ஹைதராபாத் என நாடு முழுவதும் இருந்து 424 நாய்கள் பங்கேற்றன. பாக்ஸர், டாபர்மேன், கிரேடன், ஜெர்மன் செப்பர்டு, ஆஸ்திரேலியன் புல்டாக், பக், டாக்செண்ட், ஆப்கான் கவுண்ட், பிகில், பொமேரியன், கோல்டன் ரெட்ரீவர், சிஜூ, சிப்பி பாறை, ராஜபாளையம், ஹஸ்கி மற்றும் நாட்டு நாய்கள் உள்ளிட்ட 60 வகையான நாய் இனங்கள் போட்டியில் பங்கு பெற்றனர். இதில், நாய்களின் உரிமையாளர்கள் வளர்ப்பு மற்றும் நாய்களின் திறன் அடிப்படையில் சிறந்த நாய்க்கு பரிசளிப்பதாக கூறப்படுகிறது.
0
0