கண்டெய்னர் லாரியில் சிக்கி வேரோடு பெயர்ந்து விழுந்த வேப்பமரம்.. வழக்குப்பதிவு செய்த போலீசார்!

Author: Udayachandran RadhaKrishnan
19 January 2024, 8:11 pm
Quick Share

கண்டெய்னர் லாரியில் சிக்கி வேரோடு பெயர்ந்து விழுந்த வேப்பமரம்.. வழக்குப்பதிவு செய்த போலீசார்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள நாலாட்டின்புத்தூரில் கழுகுமலையிலிருந்து கோவில்பட்டி நோக்கி தீப்பெட்டி பண்டல்களை ஏற்றி வந்து கொண்டிருந்த கண்டைனர் லாரி எதிரே வந்த பேருந்திற்கு வழி விடுவதற்காக ஒதுக்கிய போது மரத்தின் கிளை கண்டெய்னர் லாரியில் சிக்கி வேரோடு சாய்ந்தது.

இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இச்சாலை தென்காசி, சங்கரன்கோவில், கோவில்பட்டி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய முக்கிய நகரங்களை இணைக்கும் சாலை என்பதால் எப்போதுமே போக்குவத்து அதிகரித்தே காணப்படும் மரம் ரோட்டில் விழாமல் கண்டைனர் மீதே விழுந்ததால் ஆபத்து ஏதும் நேர வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுனரான குமாரகிரி கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி முத்துவின் மகன் மரிய மைக்கலை விசாரணை செய்து வருகின்றனர்.

  • Napolean 6 மாதம் கழித்து மீண்டும் தனுஷுக்கு திருமணம் செய்வேன் – குண்டு தூக்கி போட்ட நெப்போலியன்!
  • Views: - 378

    0

    0