திடீரென அழுத 3 வயது சிறுமி.. 9 வயது சிறுவனின் பகீர் பதில்!

Author: Hariharasudhan
20 December 2024, 5:53 pm

புனேவில், 3 வயது சிறுமிக்கு 9 வயது சிறுவன் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புனே: மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள கோந்த்வா பகுதியில் 3ஆம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுவன் மற்றும் 3 வயது சிறுமி வசித்து வருகின்றனர். இந்த இரண்டு சிறுவர்களின் குடும்பமும் ஒரே தெருவில் அக்கம்பக்கத்தினராக நீண்ட காலம் வசித்து வந்து உள்ளனர்.

இதனால், அந்த சிறுமி, சிறுவனை ‘அண்ணா’ என்று அழைத்து வந்து உள்ளார். இந்த நிலையில், சிறுமி தனியாக இருந்து உள்ளார். அப்போது, அந்த சிறுவன் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு உள்ளார். இதனையடுத்து, அந்தக் குழந்தை அழுதுகொண்டே வீட்டுக்குச் சென்று உள்ளது.

அப்போது, எதற்காக அழுகிறாய் என தாய் கேட்டு உள்ளார். அப்போது, தனக்கு நேர்ந்த கொடுமையை அந்த சிறுமி, தனது அம்மாவிடம் கூறி மீண்டும் அழுது உள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய், இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்து உள்ளார்.

Shocking incident in Pune Three year old girl harassed by nine year old boy

இந்த தகவலின் பேரில், குழந்தைகள் உரிமைக்காக பணியாற்றும் தனியார் தொண்டு நிறுவனத்தி,ல் அந்த சிறுமியை ஒப்படைத்து போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். அதில் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் அந்தச் சிறுமி கதையாகக் கூறியுள்ளார். இது தனியார் தொண்டு நிறுவன ஊழியர்களையே அதிர வைத்து உள்ளது.

இதையும் படிங்க: பாஜக நிர்வாகியை படுகொலை செய்த திமுக ரவுடிகள்.. ஆதாரத்துடன் அண்ணாமலை புகார்!!

இதனைத் தொடர்ந்து, 9 வயது சிறுவனை சிறார் நீதி வாரியத்தின் கட்டுப்பாட்டில் வைத்து விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது, செல்போனில் உள்ள சமூக வலைத்தளத்தில் சில காட்சிகளைப் பார்த்ததால், அது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளதாக அதிர்ச்சி அளித்து உள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?