1000 பேருக்கு அசைவ விருந்து.. 50 அடி உயர கொடியை ஏற்றி வைத்து தமிழக வெற்றிக் கழகம் அசத்தல்!

Author: Udayachandran RadhaKrishnan
25 August 2024, 4:22 pm

தமிழக வெற்றிக் கழக கொடி அறிமுக விழா; தமிழகத்திலேயே முதல்முறையாக 50 அடி உயர கொடி ஏற்றி வைத்து 1000 பேருக்கு சமபந்தி அசைவ விருந்து

ஆட்டுக்குட்டிகள் முதல் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வரையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் தவெக சார்பில் வழங்கபட்டது

மதுரை கருப்பாயூரணியை அடுத்துள்ள ஓடைப்பட்டி பகுதியில் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி அறிமுக விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சமீபத்தில் சென்னையில் கழகத்தின் கொடியை ஏற்றி அறிமுகம் செய்து வைத்தார். அதனைத்தொடர்ந்து தமிழகத்திலேயே முதல் முறையாக மதுரை ஓடைப்பட்டி பகுதியில் 50 அடி உயர கொடியை அக்கட்சியின் மதுரை மாவட்ட(வடக்கு) தலைவர் விஜய் அன்பன் கல்லனை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.

பின்னர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு 35000 ரூபாய் கல்வி உதவித்தொகையும், 5 பேருக்கு குலுக்கள் முறையில் ஆட்டு குட்டிகள் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் ஒருவருக்கு இஸ்திரி பெட்டியுடன் கூடிய வண்டி, மற்றும் 50க்கும் மேற்பட்டோருக்கு முதியோர் உதவி தொகையும் வழங்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து கொடி அறிமுக விழாவை முன்னிட்டு 1000 பேருக்கு சமபந்தி அசைவ விருந்து பரிமாறப்பட்டது.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 196

    0

    0