மருந்து இங்க இல்ல.. பச்சிளம் குழந்தைகளை தூக்கி வரும் பெற்றோர்களை அலைக்கழிக்கும் செவிலியர்..!

Author: Vignesh
29 August 2024, 9:09 am

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் : தடுப்பூசி போட பச்சிளம் குழந்தைகளை தூக்கி வரும் பெற்றோர் – அலைக்கழிக்கும் செவிலியர்களின் வீடியோ காட்சிகள் சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை செல்வபுரம் பத்ரகாளியம்மன் கோவில் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்துக்கு பச்சிளம் குழந்தைகளை தூக்கிக் கொண்டு தடுப்பூசி போட வரும் தாய்மார்களை அங்கு உள்ள செவிலியர்கள் அலைக்கழிப்பதாக கூறப்படுகிறது.

ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த செவிலியர், சுகாதார மையத்தில் இல்லாமல் வேறு இடங்களில் இருக்கும் பொழுது அந்த இடத்திற்கு தடுப்பூசி போட குழந்தைகளை தூக்கி வர சொல்கின்றனர். ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி கைவசம் இல்லை எனவும், சுகாதார மையத்தின் செவிலியர் இருக்கும் இடத்தில் ஊசி இருப்பதாகவும் கூறி ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை அலை கழிப்பதாக கூறப்படுகின்றது.

தடுப்பூசி போட குழந்தையை தூக்கிக் கொண்டு வந்த நபர் ஒருவர் இந்த காட்சிகளை செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார். இந்த காட்சிகள் வைரலாகி வருகின்றது. பச்சிளம் குழந்தைகளை தூக்கி வந்த பெற்றோர்,
ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே மருந்து இல்லை என சொல்கின்றனர் என ஆதங்கத்தை தெரிவிக்கும் காட்சிகள் அதில் இடம்பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • ajith kumar interview on india today after long gap வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!