முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் : மாற்றுத்திறனாளி கைது

Author: kavin kumar
6 February 2022, 3:37 pm

சென்னை : சென்னையில் முதலமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோபாலபுரத்தில் உள்ள மறைந்த கருணாநிதி இல்லம், தேனாம்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் அடையாளம் தெரியாத நபர் மிரட்டல் விடுத்தார். இதனை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது வெடிகுண்டு எதுவும் இல்லை என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்தநிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது செங்கல்பட்டு மாவட்டம் வடபுறந்தவாக்கத்தைச் சேர்ந்த ஐயப்பன் என்ற மாற்றுத்திறனாளி என தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரித்தபோது, மாற்றுத்திறனாளியான தமக்கு இலவச வீடு கேட்டு மனு அளித்தும் கிடைக்காததால் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக அவர் கூறியுள்ளார். இவர் கடந்த 2021-ம் ஆண்டு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்ததால் கோயம்பேடு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ